பக்கம்:நிழல் முகங்கள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் ᎥᏮᎥ

அலையனும் என்கிறியா. பெரிய விஞ்ஞானியாய் ஆகனுமா. இல்ல ரயிலுல பொறிகடலை விக்கணுமா. சோமாறி, சோமாறி. நீ விளையாடுறதுக்கு இந்தக் குழந்தை என்ன பொம்மையா. ரத்தமும் சதையுமான எதிர்கால மனிதண்டா..."

அந்தப் பயல், சிறிதும் அசைவற்று நின்றான். எதையோ யோசிப்பதுபோல் உதடுகளைக் கடித்தான். பிறகு வெறிப்பிடித்தவன் போல் அந்தக் குழந்தைக்கு மாறி மாறி முத்தம் கொடுத்தான்.

தலையில், முகத்தில், தோளில், கழுத்தில், வயிற்றில், காலில், பிறகு, அந்தோணியை நோக்கி குழந்தை இருந்த தன் இடுப்பைக் காட்டினான்.

அந்தோணி அந்தக் குழந்தையைக் துக்கி மணியிடம் கொடுத்தான். அவரோ, அந்த பேராசிரியரிடம் கொடுத்தார். அந்தக் குழந்தையோ, லேசாய் சிணுங்கியபடியே, ரயில் பயலை நோக்க கைபோட்டது. எடு. எடு. என்பதுபோல் தன் பிஞ்சுக் கரங்களை நீட்டி நீட்டி மடக்கியது.

அந்தப் பயல், 'குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டான். அதே சமயம், அந்தக் குழந்தையிடம் நெருங்கப் போன கால்களை நிறுத்திக் கொண்டான். கைபோடும் குழந்தையை கண் கலங்கிப் பார்த்தான். வாய்முட்ட அழுதான். அந்தோணி, பயலை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். "அழாதடா. அழாதடா." என்று அழுதழுது சொன்னான். அந்தப் பயலும் "அப் அப்" என்று அந்தோணி உடம்பை தன் விறகுக் கைகளால் சுற்றி வளைத்தான்.

எல்லாமே பத்து நிமிட நேரம்.

ரயில் பயல், அந்தோணியின் அன்புப் பிடியில் இருந்து விடுபட்டு, அந்த அறைக்கு வெளியே வந்தான் படுத்துக் கிடந்த மக்கள் மத்தியில் குப்புறப் படுத்துப் பார்த்தான்; மல்லாந்து படுத்தான்; ஒருச்சாய்த்துப் படுத்தான் எழுந்து பார்த்தான்; இருந்து பார்த்தான்; நடந்து பார்த்தான்: நின்று பார்த்தான்.

அவன் மனம், அலை மோதியது. உடல் அல்லோலப்பட்டது. இறுதியில், இருக்க முடியாமல் எழுந்து அவன் வெளியே பார்த்தபோது, ஒருத்தி தென்பட்டாள். அந்த ரயில் பாலத்தில் குழந்தையைப் போட்டாளே. அவளே. அவள்தான். பயல், "அம். அம்." என்று கூவியபடியே அவளை நோக்கி ஓடினான்.