பக்கம்:நிழல் முகங்கள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

423).

بیاماسیاب

வெறிச்சோடிக் கிடந்த சென்ட்ரல் ரயில் நிலையம் வீரியப் பட்டதுபோல், பல்வேறு ரயில்கள், புள்ளி விவரக்கோடுகள் மாதிரி ஒன்றுக்கு ஒன்று நீண்டும் குட்டையாகவும் நின்று கொண்டிருந்தன.

வட கோடியில் உள்ள அவற்றின் எஞ்சின் முகங்கள் சரியாகத் தெரிய வில்லை. ஐதராபாத் துரித ரயில், காசி ரயில், பாட்னா ரயில், தாதர் ரயில், ஜி.டி. ரயில். இப்படிப் பலப் பல ரயில்கள். கால்மணி நேர வித்தியாசங்களில் புறப்படக்கூடியவை. ஒரே பேரிரைச்சல். ஒதுக்கீட்டு அட்டவணைகளை, ஊழியர்கள் பெட்டி பெட்டியாக ஒட்டிக் கொண்டிருக்க, அவர்கள் அப்படி ஒட்டும் முன்பே, பலர், ஒட்டுகிறவர்களையே ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.

எல்லா ரயில்களையும் விட, நீண்டிருந்த ஜி.டி.யில் எஸ்.11 பெட்டியில் அந்த ரயில் பயல், ஜன்னலோர இருக்கையில் சாய்ந்து கிடந்தான். பொதுவாக ரயில் நகரப் போகிற சமயத்தில் மட்டுமே, எந்தப் பெட்டியிலாவது ஒரு பெட்டியில் ஏறி, அந்த சேவகப் பெட்டிக்கு வரும் அவன், ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே, வந்துவிட்டான். பேராசிரியரும், பேராசிரியையும் தோட்டித் தொழிலாளி அந்தோணி காட்டிய இடங்களில் உட்கார்ந்தார்கள். பேராசிரியை மடியில் இருந்த அந்தக் குழந்தை, இப்போது அதன் அம்மாவால்கூட அடையாளம் காண முடியாதபடி மாறியிருந்தது. அதன் கழுத்தில் தாயத்திற்குப் பதிலாக தங்கத்திலான டாலர் சங்கிலி மின்னியது. ஊதா நிற நீளக்கால் சட்டை கம்பளிப் பின்னல்சட்டை தலையில் வட்டமான தொப்பித் துணி. இப்போதும் அந்தக் குழந்தை, அம்மா வருவாளா என்பது மாதிரி அங்குமிங்கும் பார்த்தது. அதன் கன்னங்கள் வீங்கியிருந்தன. அந்த ரயில் பயலை, தற்செயலாகப் பார்த்த அந்தக் குழந்தை லேசாய் சிரித்து அவனை நோக்கி கைபோட்டது.

ஆனால், அவனோ, முகத்தைத் திருப்பி, அதுக்கு முதுகைக் காட்டினான். கிட்டாதாயின் வெட்டென மற என்ற பழமொழியை தெரிந்து வைத்திருந்தவன் போல். அதுமட்டுமல்ல காரணம். இப்போது அவனே குழந்தையாகிப் போயிருந்தான். அந்தக் குழந்தையைப் பெற்றவளை ரயில் நிலையத்தில் பார்த்த நினைவுகளில் இருந்து, அவன் இன்னும் விடுதலையாகவில்லை.

அவளை நோக்கி, ஒடிப் போனவனை, அவள் மருட்சியுடன் பார்த்தாள். "ஏய்" என்று கூப்பிடப் போனவன், குழந்தையைப் பற்றி