பக்கம்:நிழல் முகங்கள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 153

அவளே கேட்கட்டும் என்பது மாதிரியும், என்னைப் பெற்றவனாக இருந்தால் அவளே அடையாளம் கண்டு கொள்ளட்டும் என்பது மாதிரியும், அவளுக்கு முழுமையான முகத்தைக் காட்டியதும், நினைவுக்கு வந்தன. ஆனால், அவளோ, அவனை பயத்தோடு பார்த்ததும், அவனிடம் குழந்தை தத்தாகி இருப்பதைச் சொல்லப் போனவன், அதைக் கேட்கக்கூட அவளுக்கு தகுதியில்லை என்று நினைத்து சும்மா இருந்ததும், அந்தச் சந்தப்பத்தில், அவனுக்கு தெரிந்த ஒரு போலீஸ்காரன், "குழந்தையை எங்கேடா" என்று கேட்டபடியே ஒரு பத்திரிகையை புரட்டியபோது, அவனும் அவளும் பயந்துபோய் எதிரெதிர் திசைகளில் ஒடியதும் நினைவு களாயின. அதோடு அவனுக்குள்ளே ஒரு பட்டிமன்ற விவாதம் ஆறு வயதில் பார்த்த அம்மா முகம் மாதிரி அவள் தெரியவில்லை. இவளுக்கு முகத்தில் அம்மைத் தழும்புகள். அம்மாவுக்குக் கிடையாது. ஒருவேளை. அவனை கூட்ட நெரிசல் சாக்கில், விட்டுவிட்டுப் போன பிறகு அம்மை வந்திருக்குமோ? இவன்தான் ஒருவேளை என் அம்மாவோ..? இந்த ர்யில் நிலையத்துலதானே மணியப்பா என்னைக் கண்டெடுத்தார்.

மருகிக் கொண்டிருந்த அந்தப் பயல், ஒரு முடிவுக்கு வந்தவன் போல், முதுகு இருந்த இடத்திற்கு முகத்தைக் கொண்டு வந்தான். கம்பீரப்பட்டவன்போல் கழுத்தை உயர்த்தி வெளியே எட்டி பார்த்தபயல், அந்தப் பெட்டிக்கு வெளியே, சுந்தரம் அப்பா, கையில் ஒரு பேப்பர் பார்சலுடன் நிற்பதைப் பார்த்துவிட்டு, உள்ளே போய், பெட்டிக்கு உள்ளே பதுங்கிக் கொண்டான். அப்பாவின் வாழ்க்கையில் குறுக்கிட்டு, அவர் மனைவியை புயலாக்கி அப்பாவைப் புரளியாக்கி விடக்கூடாது. ஆனாலும், அப்பாவை நான் பார்க்கணும், அவர்தான் என்னைப் பார்க்கக்கூடாது. அவர், என்னைப் பார்க்காத சமயமாக, நான் அவரைப் பார்க்கனும்.

இப்போ மட்டுமில்ல. எப்போவும்.

வெளியே நின்ற சுந்தரம், உள்ளே நின்ற அந்தோணியிடம் கேட்டார்.

"அந்தோணி. நம்ம பயலைப் பார்த்தியா?"

"பார்க்கலண்ணே. இனிமேல்தானே வருவான். உன்னே வாங்கண்ண்ே."

"பரவாயில்லே. இங்கே நின்னால்தான் அவன் எந்தப் பக்கமாய் வாரான்னு தெரியும்."

“என்னண்ணே புதுக்கைதையாய் இருக்குது. ஒங்ககிட்ட இருந்துதானே வருவான்."