பக்கம்:நிழல் முகங்கள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சு. சமுத்திரம்

"நிசந்தான். ஆனால் இன்னிக்கு அப்படி இல்ல."

"என்னாச்சு...”

"அந்தச் சின்னப்பயல் பெரியவனாயிட்டான். இந்தப் பெரியவன் சின்னவனாயிட்டேன். காலையில் இருந்து, இந்த சாயங்காலம் வரைக்கும் என் கண்ணுலயே பட்ல. எனக்குக்தான் மனசு கேக்கல."

மேற்கொண்டு ஏதோ பேசப்போன சுந்தரம் லேசாய் இருமினார். ஏதோ பேசினார். அப்புறம் பலமாக இருமினார். அந்தோணி, பதறியபடியே கேட்டான்.

"உடம்பை ஜாக்கிரதையா பார்த்துக்கங்கண்ணே. இரண்டு வாரத்திற்கு முன்னால ஒங்களுக்கு இருதய அட்டாக் வந்துதாமே. அப்படியாண்னே..?"

"பலமா நெஞ்சு வலிச்சுது. ரயில்வே டாக்டர்கிட்டே போனேன். இருதய தாக்குதலுக்கு சான்ஸ் இருக்கு. எச்சரிக்கையா இருங்கன்னு சொன்னாரு. திசமாவே எனக்கு வந்தது, நானே உணராத நெஞ்சுத் தாக்குதலான்னு கேட்டேன். பயப்படாதீங் கோன்னு மட்டும் பதில் சொன்னார். எனக்கு சிகரெட் கிடையாது. புகையிலை கிடையாது சல்பேட்டா சகவாசமில்லை. அப்படி இருக்கையில் எனக்கு எப்படி வரும். மாத்திரை தந்தார். நான்தான் சாப்பிடல."

"எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவங்களுக்கும், இந்த மாதிரி ஹட்டாக் வருமாம். இதுலதான் இயற்கையோட சூட்சுமம் இருக்குண்ணே. டாக்டரை அடிக்கடி பாருங்கண்ணே. "இது" எப்போ வேணுமுன்னாலும் வருண்ணே. டாக்டரை அடிக்கடி பாருங்க"

'பார்க்கலாம். பார்க்கலாம். இத்தப் பயலைப் பார்க்க முடியலியே."

பெஞ்சுக்குக் கீழே கிடந்த பயல், துடித்துப்போனான் அப்பா வுக்கு அந்த நோயா...? எங் கப்பாவுக்கு எப்போ வேணுமுன்னாலும் "இது வருமா.

அந்தப் பயல், பெஞ்சை உடைப்பதுபோல் வீறிட்டு எழுந்தான். "அப். அப்." என்று ஓடியபடியே எதிர்ப்பக்க ஜன்னலருகே முகம் புதைத்தான். பிறகு, எந்த வழியாகப் போனால், சீக்கிரம் போகலாம் என்பதுபோல், அங்குமிங்குமாய் ஒடி, எதிரே சுமையோடு வந்த, போர்டர்மேல் மோதி, வெளியே வந்தான். சுந்தரத்தை வயிற்றோடு சேர்த்து இடுப்பைக் கட்டிக்கொண்டு 'அப். அப்." என்று கத்தினான். பிறகு அவர் வயிற்றில் மோவாயை ஊன்றியபடியே,