பக்கம்:நிழல் முகங்கள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 சு. சமுத்திரம்

"நான் பேசலப்பா. ஏதோ ஒண்ணு பேச வைக்குது. பாசமா பந்தமா சிநேகிதமா. முன்ஜென்மத் தொடர்பா. மனுஷத்தன்மையா. இல்ல இதுங்க எல்லாம் சேர்ந்த கடவுளா.. எனக்கே தேரியலே. ஏதோ ஒன்று என்னை, நீ பாராட்டும்படியா பேச வைக்குது."

"எதுவுமில்லே. இந்த பயல்தான் அப்படி பேச வைக்கான்”

சுந்தரமும், அந்தப் பயலும், ஒருவரை ஒருவர் நேருக்கு நேராய் பார்த்தபடியே நின்றார்கள். கண்ணுக்குத் தெரியாத அதேசமயம். கட்புலனுக்கு புலனாகும் பாச ஈர்ப்பு சக்தியாக இணைக்கப்பட்டு, ஒருவர் அருகாமையில் இன்னொருத்தர் 'சுகம் கண்டார்கள்.

توانایع

அந்த ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயிலின் எஞ்சின் மூக்கில், பச்சை

மூக்குத்தி குத்தப்பட்டதுபோல் சிக்னல் விழ, அந்தக் குத்தலின் கஷ்ட சுகத்தில் சிணுங்குவதுபோல், ரயில் சத்தம் போட்டது.

பயணிகள் ஏறிக் கொண்டார்கள். அவர்களை சந்தோஷ மாகவோ அல்லது சமர்த்தாகவோ வழியனுப்ப வந்தவர்கள். இறங்கினார்கள். சுந்தரத்தை விட்டுப் போகத் தயங்கிய பயலின் முதுகை, அவர் தட்டிக் கொடுத்தார். அவனை, ரயில் வாசலுக்கு இழுத்துப் போனார். அந்தப் பயலும், அவரை மாத்திரை சாப்பிடும் படி சொன்னபடியே தயங்கித் தயங்கி உள்ளே போனான். அவன் சுந்தரத்தைவிட்டு, அப்புறம் ஒரே ஒட்டமாய் ஒடி ஏறிக் கொண்டான்.

அந்தப் பெட்டியின் வடக்கு வரிசையில் பேராசிரியர், பேராசிரியை, இருவரும் மடிகளில் குழந்தையை படுக்க போட்டபடி உட்கார்ந்திருந்தார்கள். இவர்களை அடுத்து நாற்பது வயது நரைவிழுந்த மனிதர். அவரை அடுத்து ஒரு வாலிபன். கன்னங் கருப்பன். உருண்டு திரண்ட உடம்பன். தெற்கு வரிசையில் ஜன்னலோரம் ரயில் பயல். அப்புறம். அந்தோணி. இன்னொரு துப்புறவத் தொழிலாளி கணேசன், அப்புறம் ஒரு காலியான இடம். அந்தோணி, கணேசனிடம் கேட்டான்.

"படபடத்தானை எங்கே?"

"யாரு மெக்கானிக் சோமையாவா..?”