பக்கம்:நிழல் முகங்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 சு. சமுத்திரம்

பயல், இப்போது வடக்கு நோக்கி முகம் போட்டான். முண்டாசு இளைஞனின் கையைப் பிடித்தபடியே வா போகலாம். என்பதுபோல், அவனை டில்லியை நோக்கிப் போகும் ரயிலுக்கு இழுத் தா ன் இப் ப ம ட் டு ம் துரை க்கு , டெ ல் லி குளிர் தெரியலையோ? என்றான் முண்டாசு.

அந்தப் பயல், தான் என்னமோ ஒரு எஞ்சின் மாதிரியும், அந்த முண்டாக, ஒற்றை ரயில் பெட்டி மாதிரியும், தனது இரண்டு கைகளால் அவனது கைகளை இழுத்துப் பிடித்தபடி ஓடினான். அந்தக்காலத்து கரி எஞ்சின் மாதிரி அவன் வாயிலிருந்து பனிப்புகை கக்கியது. அந்தச் சமயம் பார்த்து, இன்னொருத்தன் ஓடி வந்தான். அவன் ஓடி வந்த வேகத்தை பார்த்ததும், நின்று கொண்டிருந்த பயணிகள் வண்டிக்குள் ஏறினார்கள். வண்டிக்குள் இருந்த பயணிகள், வெளியே வந்தார்கள். வந்தவன், முண்டாசுக்காரனை இழுக்கும் அந்தப் பயலுக்கு முன்னால், வழி மறியல் செய்தபடியே, முண்டாசை பின்பக்கமாகத் தள்ளினான். ஒரு உற்சாகமான சண்டை நடக்கப் போவதுபோல் பெரும்பான்மையான பயணிகள் ரயில் பெட்டிகளின் ஜன்னல் வாய்களில் முகங்களை பதித்தார்கள். இதற்குள், வழிமறித்தான் ஒரு அதட்டல் போட்டான். அது, புயலுக்கு முன் நிலவும் அமைதிபோல், ஒரு இடி முழக்கமான சண் ைடக் கு ஏற்பா டு த டப்பதாக பயணிகள் ர சிக் கத் துவங்கினார்கள். இந்தச் சண்டையை கிட்டே நின்று பார்ப்பதற்காக கீழே இறங்கப்போன ஒரு சில ஆண்களை, அவர்களது சரிபாதிகள் அல்லது சகோதரிகள் சட்டைகளை பிடித்து பின்னோக்கி இழுத்தார்கள். சில பெண்கள் போக விட்டார்கள் - அப்படியாவது சனியன் பிடித்த சர்வாதிகார மனிதர் உதை வாங்கிக்கொண்டு வர ட் டும் என்பது போல் வழி மறித் தான் அ த ட் ட ைல பேச்சாக்கினான்.

"ஒனக்கு அறிவிருக்காடா ? வழக்கமாய் எங்ககூட வாரது மாதிரி வரவேண்டியதுதானே..? இந்தப் பய பேச்சைக் கேட்டு, டெல்லி குளிர்ல சாகப் போறியா? வாடா போகலாம்."

அந்தப் பயல், சுந் அப். சுந் அப் என்று வலது கையை தலைக்கு மேல் வில்லாய் வளைத்து, விரல்களை முன்பக்கமாக படர விட்டான். வந்தவன் ஒன்றும் புரியாமல் விழித்தபோது, பயல், 'சுந் அப். டிக். டிக். என்று சொன்னபடியே, முண்டாசுக்காரனைப் பிடித்து, 'வா போகலாம் என்பதுமாதிரி இழுத்தான். உடனே முண்டாசுக்காரன், வந்தவனைப் பார்த்து கண்ணடித்தபடியே

"இவனோட அப்பா கந்தரம், இவனை மாதிரி ஒசிக் கிராக்கியா இல்லாமல். டிக்கெட் டோட டெல்லி ரயிலுல இவனுக்காக காத்திருக்கார்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/17&oldid=588168" இலிருந்து மீள்விக்கப்பட்டது