பக்கம்:நிழல் முகங்கள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் - 157

அப்போது பார்த்து சோமையா வந்தான். தன்னைப் பின் தொடர்ந்து வந்த உதவியாளர் கிருஷ்ணனிடம் கத்தினான்.

"என்னய்யா எல்லா ஃபேன்களும் ஆடுது..?" "சுற்றும்போது ஆடத்தான் செய்யும்."

"இந்தத் திமுறுதானே வாணாங்குறது. அடுத்த ஸ்டேஷன் வந்ததும் எல்லா மின்சார விசிறிகளையும் டைட் பண்ணனும். என்னய்யா இது, ஒரே ஈரம். ஏம்மா ஒங்க குழந்தை ஒண்னுக்கு இருந்துதா..? வெளில போய் விடப்படாது.”

"அதுக்கு எப்போ வரும் எப்போ வராதுன்னு எப்படி ஸார் தெரியும்.?"

"தெரியுமோ. தெரியாதோ. தெரியணும். அதோ பாருடா. கிருஷ்ணா. அங்கே இப்பவே அவனும் அவளும் எப்படி ஒருத்தர் மேல் ஒருத்தர் சாயுறாங்க பார். அநேகமா அவள், அவன் சம்சாரமாய் இருக்க மாட்டாள். இருந்தாலும், இப்படியா குலாவுறது. அதோ அந்த ஆசாமிக்கு எத்தனை பெட்டிங்க பாருபெட்டி வியாபாரம் பாக்கானா..? அந்தப் பயல் தள்ளு வண்டியை எப்படி வளைச்சு வளைச்சு தள்ளுறான் பாரு. இதனாலதான் பிளாட்பாரம் தேஞ்சுடுது. இவங்களை எல்லாம் நிக்க வச்சு சுடனுமுய்யா."

"இப்போ சுடனுமுன்னால் ஒன்னைத்தான் சுடனும், ஏன்னா, நீ மட்டும்தான் நிற்கிறே. பேசாமல் உட்காரு. ஸாரே."

சோமையா, அந்தோணியை முறைத்தபடியே உட்கார்ந்தான். ரயில், கொருக்கு ப்பே ட்டை, தண்டை யார் பேட்டை, திருவொற்றியூர், விம்கோ நகர், கத்திவாக்கம், எண்ணுார், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி. ஆகிய ரயில் நிலையங்களைக் கடப்பது வரைக்கும், தத்தம் சாமான்களை அடுக்கியபடியும், பணம், டிக்கெட், போன்றவற்றை சரிபார்த்துக் கொண்டும் இருந்த பயணிகள், ரயில், சூலூர்பேட்டையைத் தாண்டியபோது, நிதானத்திற்கு வந்தார்கள். மற்றவர்களும், அந்த ரயிலில் பயணம் செய்கிறார்கள் என்பதை அப்போதுதான் கண்டவர்கள்போல், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பேராசிரியர், பேராசிரியை அமர்ந்துள்ள இடத்தையே மெக்கானிக் சோமையா குறிபார்த்தான். இடுப்புக்கு மேல் அந்தம்மா மடியிலும், இடுப்புக்குக் கீழே பேராசிரியர் மடியிலுமாக இப்போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தையையும், அந்த தம்பதியரையும் மாறி மாறிப் பார்த்தான். பேராசிரியர் அதைப் புரிந்து கொண்டு, சிரித்தபடியே சொன்னார்.