பக்கம்:நிழல் முகங்கள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I5& சு. சமுத்திரம்

"இத்த வயதில். இவர்கள் எப்படி குழந்தையை பெற்றார்கள் என்று யோசிக்கிறீர்களா தம்பி.? இந்த வயதிலும் பலர் பெற்றுக் கொள்கிறார்கள் என்றாலும், அந்தப் பேறு கிடைக்காதவர்கள் நாங்கள். இந்த ரயில் தந்த பரிசு இது. ஒரு அதிகாரி அம்மா ஆடுன ஆட்டத்தைப் பார்த்ததும், இப்போகூட பயமாய் இருக்கிறது. எங்கே அந்த அரசம்மா.இங்கேயும் வந்து இந்தக் குழந்தையையும் பறித்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. ஆமாம் தம்பி. இந்த நாட்டிலே திக்கற்று தெருவிலே கிடக்கிற குழந்தையை எடுத்த வளர்க்க வேண்டுமானாலும் சமூக நலத்துறையின் முன் அனுமதி வேண்டுமாம். இல்லையானால் சட்டப்படி குற்றமாம். ஏற்கனவே மணித்தம்பி தந்த குழந்தையை, அந்தம்மா பறித்துப் போய் விட்டாள்."

சோமையா, படபடத்தான்.

"அய்யய்யோ. இது சிக்கலான குழந்தையாய் இருக்கும்போல. எதுக்கும் ரயில்வே கார்டுகிட்டே ஒரு வார்த்தை சொல்லிடுங்க. ஒங்களைத்தான் பெரியவரே. இன்னுமா குத்துறிங்க? சீக்கிரமாய் எழுந்துபோய் விவகாரத்தை சொல்லிட்டு வந்திடுங்க... என்ன எழுந்திருக்காமல் இருக்கிங்க சரி நானே. போய் சொல்லிட்டு அவரையே கூட்டிட்டு வாறேன்."

எழுந்திருக்கப்போன சோமையாவின் தோள்களை அந்தோணி அமுக்கிப் பிடித்தபடியே "ஒனக்கு மூளை இருக்குதா ஸாரே. ரயில்கார்டுக்கும், இந்த விஷயத்துக்கும் என்ன சம்பந்தம். பேசாமல் உட்கார்." என்று சொன்னபடியே அவனை எழுந்திருக்கவிடாமல் செய்தான். சோமையாவால் எழ முடியவில்லையே தவிர, பேசாமல் இருக்க முடியவில்லை.

"சரியான மணி. இவருக்கு எதுக்கு இதுல்லாம்? தோ பார்டா கிருஷ்ணா! எந்த மடப்பயலோ முன்னால் இருக்கிற பெட்டியில இருந்து துப்புறான். பாரு. நம்ம மேல பட்டா என்னாகிறது.? யோவ் வேர்க்கடலை. சாப்பாட்டுச் சமயத்துல வவுத்தைக் கெடுக்கிறதுக்கு வந்துட்டியா..? கிருஷ்ணா. ரயில் கூடுர்ல நிற்கப்போ, நீ ஃபேன்களை டைட் செய்யணும். சக்கடா வண்டிபோல ஒரே ஆட்டம்."

பேராசிரியர், சோமையாவை விட்டுவிட்டு அருகே இருந்த வாலிபனைப் பார்த்தார். அவன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

"என் பெயர் இளங்கோ. டில்லியில் சர்வீஸ் கமிஷனில் நேரடித் தேர்வுக்குப் போறேன். ஐ.ஏ.எஸ். பரிட்சை தேறிட்டேன். இப்போ நேர்முகத் தேர்வுக்குப் போறேன்."