பக்கம்:நிழல் முகங்கள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திழல் முகங்கள் 150

பேராசிரியர், அவனை பெற்ற மகனை பெருமிதமாய் பார்ப்பதுபோல் பார்த்துப் பேசினார்.

"ஒங்கள மாதிரி கருத்த பையன்கள் இந்த மாதிரி தேர்வுகளில் வெற்றி பெறுவதைப் பார்க்க எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்குது தெரியுமா...? இந்திய நிர்வாக சேவை அல்னியில் தேறுபவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலப் பள்ளிகளில் படித்தவ்ர்கள். இவர்களுக்கு உயரமான சிகரம், ஆழமான நதி, ஏழு அதிசயங்கள் எல்லாம் தெரியும். ஆனால், தாய்மொழியோ அல்லது குட்டாம்பட்டி. சட்டாம்பட்டி மாதிரியான கிராமங்களேர் தெரியாது. வெள்ளையன் போனாலும் இப்படிப்பட்ட வெள்ளையர்கள்தான் நம்மை ஆள்கிறார்கள். இந்த அணியில் கிராமத்துப் பையனாக தோற்றம் காட்டும் நீங்கள் இணைவது 'காணாத மாடு கம்பம் புல்லில் மேய்ந்த கதையாகக்கூடாது. ஏழை எளிய மக்களுக்கு சரியான மேய்ப்பனாய் இருக்க வேண்டும். ஏய்ப்பனாய் அல்ல."

"தேங். மன்னிக்கனும் நன்றி. தமிழ் இலக்கியத்தில் தனிச்சிறப்பு எதுன்னு கேள்வி கேட்கலாம். அய்யா சற்று விளக்கமாய்."

"யோவ் கிருஷ்ணா, இவங்க பேச்சில மெய் மறந்துடாதே. கூடுர்ல ஃபேன்களை டைட் செய்யனும். பெரிய ஸ்பேனரை எடுத்து வந்தியா?"

"தம்பி. சற்றே சும்மா இருக்கிறீர்களா.. அவர்கள் கேட்கிறார் களோ இல்லையோ. நீங்கள் கேட்ட கேள்வி செம்மையானது."

பேராசிரியர், பேச்சு தடைப்பட்டது. அந்த பெட்டிக்குள் ஒரு அம்மைத் தழும்பு பெண் வந்தாள். கண்ணிரும் கம்பலையுமாகக் கதறினாாள்.

"இது என் பிள்ளய்யா. என்கிட்டே கொடுங்கய்யா. வேணுமுன்னால் இந்தப் பையன் கிட்டே கேட்டுப் பாருங்கய்யா. இந்தாப்பா நீயும் எனக்குப் பிள்ளைதான். சொல்லுப்பா."

அப்போது, அந்த ரயில், கூடுர் ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இருபக்கமும் காடுகள் குறைந்து கட்டிடங்கள் தோன்றத் துவங்கின. அந்தப் பெட்டிக்குள், அதற்கேற்ற கண்போல், அதன் உச்சியில் வட்டமாக இருந்த கண்ணாடி விழிகள் மூலம் வெளிச்சம் வெளிப்பட்டு, அந்தப் பெண்ணை சிறிதாகவும், அவள் நிழலைப் பெரிதாகவும் காட்டியது. ரயில் பயலின் மனம், அந்த ரயில் போலவே குதிபோட்டது. இவள் என் அம்மாதானா..? இதனால் தான் விதி எங்களை அப்படி சேர்த்து வைக்கிறதா. அவன் ஏதோ பேசப்போனான். ஏனோ பயலால் பேச முடியவில்லை.