பக்கம்:நிழல் முகங்கள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 சு. சமுத்திரம்

எல்லோருமே, அவளைப் பார்த்தார்கள். பெரிய பெரிய எலும்புகளும், அவற்றில் சின்னச் சின்ன சதைப் பிடிப்புகளுமாகக் காணப்பட்டாள். நன்றாக சாப்பிட்டு, மனக்கலக்கம் இல்லாமல் இருந்தபோது, அவள் வாளிப்பான பெண்ணாக இருந்திருப்பாள் என்பதை யூகிக்க முடிந்தது. நல்ல உயரம். நாட்டுக்கட்டை என்பார்களே அப்படி.... அம்மைத் தழும்புகள் அவள் முக லட்சணத்தை அதிகமாய் பாதிக்கவில்லை. அவள் மீண்டும் "என் பிள்ளையை கொடுங்கய்யா. கொடுங்கய்யா." என்று சொன்ன படியே அந்த குழந்தையை நோக்கி நகரப்போனபோதே, சோமையா எழுந்து கையை நீட்டி வழிமறித்தபடி கத்தினான்.

"மொதல்ல மாராப்புச் சேலையை ஒழுங்காய் போடும்மா. பொண்னாம் பொண்ணு. எந்த இடத்துக்கு எப்படி வரணுமுன்னு தெரியவேண்டாம். டேய் கிருஷ்ணா. கூடுர் வரப்போவுதுடா. வெளில பாரு. ரயிலு போறதும் தெரியாமல் அந்தப் பயல் எப்படி "ஒதுங்கி இருக்கான் பாரு. நிற்க வச்சுச் சுடனும்."

'என் குழந்தையை கொடுத் திருங் கய்யா... கோ டி ப் புண்ணியமய்யா."

அந்தோணி இருந்த இடத்தில் இருத்தபடியே, எதிர் பெஞ்சில் காலை வைத்து, அவளுக்கு எல்லைக்கோட்டை போட்ட்படி கேட்டான்.

"நீதான் இந்தக் குழந்தையோட அம்மா என்கிறது என்ன நிச்சயம்.? நாட்ல கேடிங்க செய்யுறது மாதிரி, நீயும் இந்தக் குழந்தை யோட கண்கனை குருடாக்கியோ, காலை நொண்டியாக்கியோ, இதைக்காட்டி பிச்சை எடுக்கமாட்டே என்கிறது என்ன நிச்சயம். ஒன் னை மாதிரி எத்தன பொம்மனாட் டிங் களை நான் பார்த்திருக்கேன்."

"நீங்க நினைக்கிறவள் மாதிரியானவள் இல்லய்யா நான். வேணுமுன்னால் இந்தப் பையன்கிட்டே கேளுங்கய்யா. நான் ரயில் பாலத்துல போட்ட குழந்தைய்யா."

எல்லோரும் அவளை விட்டுவிட்டு, அந்தப் பயலைப் பார்த்தார்கள். அவனோ ஜன்னலுக்கு வெளியே போட்ட பார்வையை விலக்கவில்லை. அந்தோணி, அவன் தலையைத் தன்பக்கமாகத் திருப்பினான். ஆனால், அவனோ "ஊய்" என்று ஊளையிட்டபடியே, அந்தோணியிடமிருந்து முகத்தைப் பலவந்தமாக விடுவித்து, மீண்டும் வெளியே பார்த்தான். இதற்குள் பேராசிரியர், அமைதியாகச் சொன்னார்.