பக்கம்:நிழல் முகங்கள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் I61

"முதலில் உட்காரும்மா.. எந்த மாதிரி சந்தப்பத்தில் குழந்தையை விட்டே... என்பதை விளக்கமாகச் சொல்லும்மா.. முதலில் உட்காரும்மா. அப்போதுதான் உன்னிடம் பேசுவோம். இந்தக் குழந்தையைப் பற்றி ஒரு முடிவெடுப்போம்."

அவள், ரயில் பயல் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள். உடனே, அவன் பொங்கிய கண்களை கைகளால் மறைத்தபடியே எழுந்தான். எதிர் வரிசையில் இளங்கோவின் அருகே உட்கார்ந்து முகத்தை மீண்டும் வெளிநோக்கி வைத்துக் கொண்டான். அந்தப் பெண் அந்தக் குழந்தையையே சிறிது நேரம் பார்த்தாள். பிறகு தன் கதையைச் சொல்லத் துவங்கினாள்.

"நானும் வாழ்ந்து கெட்ட பொண்ணுதாய்யர. மதுரைக்குப் பக்கம் எங்க கிராமத்துல கொஞ்ச நஞ்சம் நிலத்துல வசதியோட வாழ்ந்தவள்தான். பால்மாடு இருக்குது. சைக்கிள் இருக்கு. ரேடியோ உண்டு. நகை நட்டும் இருக்கு. என்ன இருந்து என்ன பிரயோசனமய்யா. ஒருநாள் காலங்காத்தால என் இதய தெய்வம் இறந்துட்டதா செய்தி வந்தது."

"யாரும்மா அது."

"என்னய்யா அப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீங்க...? இதயதெய்வமுன்னா யாருன்னு ஒங்களுக்குத் தெரியாதா..? எங்க தலைவரு. அவ்வளவு கிள்ளுக்கீரையா ஒங்களுக்கு.?

"இல்லம்மா. இல், புரிஞ்சுக்கிட்டோம் சொல்லு."

"என்னோட மவராசா, என் இதய தெய்வம். நான் பதினாறு வயசுல இருந்தே மனசுல பரிபாலனம் செய்த என் உயிரு. அடங்கிப் போயிட்டதா ரேடியோவில செய்தி சொன்னாங்கய்யா. உடனே நான் அழுது புரண்டேன். ஒப்பாரி வச்சேன். ஒன்னு கத்தினேன். என் வீட்டுக்காரரும் அழுதாரு அப்புறம் நாங்க ரெண்டு பேரும். எங்க உள்ளுர் தலைவர் ஏற்பாடு செய்த லாரில. மெட்ராஸ் வந்தோம். ராசாசி மண்டபத்துல ராசா தூங்குறது மாதிரி கிடந்தாருய்யா. எத்தனையோ வில்லன்களை கத்தியாலயும், சிலம்பாலயும், துப்பாக்கியாலயும் துரத்தியடிச்ச என்னோட சிங்கராசா, சாவுக்கு தோத்துட்டாருய்யா. சாவுக்கு தோத்துட்டாரு. அலைமோதுன கூட்டத்துல நானும் அலறியடிச்சுப் போனேன். அவரை ஏறிட்டுப் பார்த்தேன். என் ராசா என்னையே பார்க்கது மாதிரி இருந்துதய்யா. என் மவராசா மதுரைக்கு வந்தப்போ பொதுமேடையில ஏறுறதுக்கு முன்னால சோடா குடிச்சாரு. பாதிச்சோடாவை ஒரு கிழவி கிட்ட கொடுத்தாரு அவள் ஒரு