பக்கம்:நிழல் முகங்கள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 க. சமுத்திரம்

அண்டா நிறைய தண்ணீரை நிரப்பி, அதுல அந்த சோடாவை ஊத்தி, டம்ளருக்கு இருபது பைசாவ்ா வித்தாள்."

"என்கிட்டே காசு குறப்யா இருந்தது. அதனால், நாலு டம்ளர்தான் வாங்கிக் குடிச்சேன். என் ராசா செத்துக்கிடந்த அந்த நேரத்திலயும் அந்த நாலு டம்ளர் தண்ணிரும் இனிப்பா தோணிச்சு. எனக்கு என்ன செய்யணுமுன்னு புரிஞ்கது. நல்லாவே புரிஞ்சுது. எவரை மனசால நெனச்சி வாழ்கிறேனோ. அவரே போனபிறகு எனக்கு எதுக்குய்யா, தாலி. மலைபோல இருந்த என் மன்மதரே போன பிறகு எனக்கு தாலி ஒரு கேடாய்யா. தூக்கி தூர எறிஞ்சேன். சொம்மா சொல்லப்படாது. என் வீட்டுக்காரர் அதை எடுத்து பழையபடி என் கழுத்துல கட்டவந்தார். நான்தான் முடியாதுன்னு முடிவாய்ச் சொல்லிட்டேன். அவரும் என்னை விட்டுட்டுப் போயிட்டார்."

"நான் என் மவராசா இழவுல கலந்துக்கிட்டேன். அவரு சமாதியில் கதறுனேன். போலீஸ்காரன் துரத்தியடிச்சான் மெட்ராஸ்ல கண்டகண்ட இடமா கால்போன போக்குல திரிஞ்சேன். அப்புறம் ஊருக்குப் போனேன். வீட்டுக்காரன் சேர்த்துக்க மாட்டேன்னுட்டான். அது மட்டுமா செய்தான். மாமனார்கிட்டே இருந்த இந்தக் குழந்தையை எடுத்து என் தோள்ல வீசி எறியுறது மாதிரி போட்டான். யாரையோ நெனச்சுட்டு. பெத்த குழந்தைக்கு நான் பொறுப்பில்லன்னு சொல்லிட்டு கதவை மூடிட்டான்.”

"கைக்குழந்தையோடு அண்ணன்மார்கிட்டே போனேன். அடிச்சு துரத்துனாங்க தங்கச்சிகிட்ட போனேன். "பாவி. உன்னால, என்னையும் ஊரு ஒரு மாதிரி பாக்குன்னு திட்டிட்டு ஒரு வேளை சோற்றை போட்டுட்டு, கையில் நூறு ரூபாயை கொடுத்து, எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போன்னு சொல்லிட்டாள். நானும் என் மவராசா சமாதில வந்து கற்பூரம் கொளுத்தி என்னைக் காப்பாற்றும்படி கும்பிட்டேன். கும்பிட்டேன். அப்படி கும்பிட்டேன். அவரு அனுகிரகம் தருமுன்னாாலயே போலீஸ்காரன் துரத்திட்டான். வயிற்றுப்பசி தாங்க முடியல. சாவுறதுன்னு தீர்மானிச்சுட்டேன்."

"இந்தப் பையன் வாரது தெரிஞ்சுதான் ரயில் பாலத்துக்குக் கீழே பிள்ளையைப் போட்டேன். ஒருமணி நேரத்துல என் பிள்ளையைப் பார்க்காம இருக்க முடியல. ரயிலு ஸ்டேஷனுக்கு வந்து. அங்கும் இங்குமாய் அலைஞ்சேன். அப்புறம், அப்புறம் என் மவராசாவ மனசுக்குள்ளேயே நெனச்சு கும்பிட்டேன். அவருதான் தர்மப் பிரபுவாச்சே நம்புனவங்களை கை விடாதவராச்சே. இந்தப்