பக்கம்:நிழல் முகங்கள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 163

பையனை என்கிட்டே கொண்டு வந்து காட்டுனாரு. நானும் இவனை பாக்காதது மாதிரி போக்குக் காட்டிட்டு, இவன் பின்னாலயே வந்தேன். இந்தய்யாவும் இந்தம்மாவும் பிள்ளையை வச்சிருக்கதப் பார்த்தேன். இவங்க பின்னாலயே ரயிலுல ஏறி வாசலோரம் ஒளிஞ்சு நின்னுட்டு. வாரேன். என் பிள்ளையை கொடுங்கய்யா. பத்து வருஷமா முழுகாமல் தவமிருந்து பெத்த பிள்ளைய்யா."

சோமையா, கோபமாய் கேட்டான்.

"அந்த சோடா போட்ட தண்ணியைக் குடிச்ச பிறகு, பெத்தியா..? சீ ஒன்னெல்லாம். இறங்குடி கீழே. டிக்கெட் இருக்குதா? டிக்கெட் இல்லாம ரயிலுல வாரது குற்றம் தெரியுமா. சே நாட்ல, டிக்கெட் இல்லாம பிரயாணம் செய்யுறது அதிகமாய் போயிட்டு. நிற்க வச்சு சுட்டுத் தள்ளணும்."

சோமையா சொன்னதை, யாரும் பொருட்படுத்தவில்லை. எல்லோரும் அவளையே பார்த்தார்கள். பார்க்கப் பார்க்க அவள் மீது கோபம் வருவதற்குப் பதிலாக பரிதாபம் வந்தது. அந்த ரயில் பயல் மட்டும் அவளருகே போய் கைகால்களை ஆட்டி ஊளை யிட்டான். "பயல், ஆயிரந்தான் இருந்தாலும் எப்படி குழந்தையை விடலாமுன்னு” கேட்பதாக அந்தோணி அவன் கையாட்டியதை மொழிபெயர்த்துச் சொன்னான். எவருக்கும் என்ன பேசவேண்டும் என்று தெரியவில்லுை. அந்தப் பேராசிரியைத்தான் குழந்தையை உற்றுப்பார்த்து கண்ணிர் சிந்தினாள். முடிவா, அந்தப் பெண்ணிடம் அந்தோணி கேட்டான்.

"குழந்தையை வாங்கிட்டு என்னம்மா செய்யப்போறே.?”

"அதுதாய்யா எனக்குப் புரியல. குழந்தை இல்லாமல் என்னால, உயிரோட இருக்க முடியாதுன்னு மட்டும் தெரியும்."

"நீயுல்லாம் எதுக்கும்மா உயிரோடு இருக்கணும்.? குழந்தையை தரமுடியாது. இதனால நீயும் சாகலாம். குழந்தையும் நல்ல இடத்துல வாழலாம். ரெண்டு பேருக்கும் நல்லது."

"அப்படிச் சொல்லாதிங்கய்யா. என் பிள்ளையை என்கிட்டே கொடுத்திடுங்கய்யா"

ரயில் பயல், அவளைப் பார்த்துக் கத்தப் போனான். அந்தோணி திட்டப்போனான். சோமையா அடிப்பதற்கே கையைத் துக்கிக் காட்டினான். பேராசிரியர், அவர்களைக் கையமர்த்திவிட்டு, அவளிடம் தீர்மானமாகச் சொன்னார்.