பக்கம்:நிழல் முகங்கள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 சு. சமுத்திரம்

"இதோ பாரும்மா. இது உன் குழந்தை. எங்களுக்கு உரிமை கிடையாது. அதேசமயத்தில், இதை விடவும் மனசு கேட்கவில்லை. ஆகையால், ஒரு யோசனை சொல்கிறன்ே. நீ இந்தக் குழந்தையுடன் என் வீட்டில் தங்க்லாம். இந்தக் குழந்தை நம் மூவருக்கும் குழந்தையாக, வளரலாம். ஏன் சிந்திக்கிறாய்...? திரைப் படங்களில் வருவதுபோல், நீ இந்தக் குழந்தையிடம் உரிமை கொண்டாடக் கூடாது என்று சொல்வோம் என்றா? அல்லது குழந்தைக்கு இந்த மங்கைதான் தாய் என்று திரைப்படத்தாயாய் நடிப்போம் என்றா? அல்ல. நீதான் தாய். இவள் பெரிய தாய். நான் வளர்ப்புத் தந்தை. வேண்டுமானால் தாத்தாவாகவே இருக்கிறேன். எங்களுக்கு வயதாகி விட்டது. நீயும் எங்களை மகள் மாதிரி கவனித்துக் கொள்ளலாம். என்ன யோசிக்கிறாய். குழந்தையின் எதிர்காலத்தைப் பார்த்து எடுக்கவும் முடியல. தாயாய் விடவும் முடியவில்லை என்று வசனம் பேசாதே. இரண்டில் ஒன்றைச் சொல்லு. உடனடியாக வேண்டாம். ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிட்டாயா இல்லையா? சரி. இதோ உன் குழந்தை. இந்தா பத்து ரூபாய். ரயில் நிலையம் வந்துவிட்டது. கீழே இறங்கி முதலில் சாப்பிடு. அப்புறம் வருவதும் வராததும் உன் விருப்பம்."

அந்தப் பெண் அசைவற்று இருந்தபோது, பேராசிரியரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பது தமக்கு பழக்கப்பட்டுப் போன வழக்கம் என்பதுபோல், பேராசிரியை மங்கை, குழந்தையை அவளிடம் நீட்டினாள். அவளும், அதை வாங்கி, முகத்திற்கு முன்னால் துக்கி வைத்துக்கொண்டே குழந்தையின் கன்னங்களில் மாறிமாறி முத்தமிட்டாள். இதைப் பார்த்த சோமையாவால் சும்மா இருக்க முடியவில்லை. அவளை அதட்டினான்.

"இந்தாம்மா. பொது இடத்துல எப்படி நடக்கணுமுன்னு தெரிஞ்சுக்கம்மா. இப்படியா சத்தம் போட்டு முத்தம் போடுறது. சீச்சி. சே. டேய் கிருஷ்ணா. இன்னுமாடா ஸ்பேனரை எடுக்கலே.? கூடுர்டா..."

அவள், லேசாய் சிரித்தபடியே எழுந்தாள். குழந்தையின் கைக்குள் பேராசிரியர் வைத்த பத்து ரூபாய் நோட்டை அவள் எடுக்கவும் இல்லை. தடுக்கவும் இல்லை. சோகச் சிரிப்போடு அவள் ரயிலுக்கு வேளியே வந்தபோது -

அந்தப் பெட்டியில் இருந்த எல்லோருமே, பேராசிரியத் தம்பதியை அதிசயத்துடன் பார்த்தார்கள். அந்தோணி, "மூணு பவுன் தங்கச் சங்கிலியோடு அனுப்பிட்டீங்களே...?” என்றபோது பேராசிரியை, 'அதுக்கென்ன...? எங்களது அன்பளிப்பாய் இருக்கட்டுமே" என்றாள். பேராசிரியரை அடுத்திருந்த நடுத்தர