பக்கம்:நிழல் முகங்கள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 165

வயதுக்காரர் - இதுவரை பேசாமல் இருந்தவர் இப்போது பேசினார். ~.

தமிழ்நாடு எவ்வளவு குட்டிச்சுவராய் போயிட்டு பாருங்கோ. நான் பஞ்சாப்புல வேலை பார்க்கேன். ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டுக்கு வரும்போது. சொந்த பூமிக்கு வாரது மாதிரி இல்ல. மொழி தெரியாத வெளிநாட்டுக்கு போவதுபோல் இருக்குது. நம் தமிழ்நாடு எவ்வளவு கேவலமாப் போயிட்டு பாருங்க. தமிழன்னு பிற மொழிக்காரன்கிட்டே சொல்லிக்கவே தலைகுனிவாய் ஆயிட்டு. இந்தப் பெண் பேசுற பேச்சைப் பார்த்தீங்களா..?" -

"நான் பேராசிரியர் என்பதால் கிணற்றுத்தவளையாய் பேசுவதாய் நினைக்க வேண்டாம். இந்தப் பெண்ணின் பிரச்சினை. பாலுணர்வு அல்ல. வாழ்க்கையை சினிமாவாகவும், சினிமாவை வாழ்க்கையாகவும் ஏற்றுக்கொள்ளும் ஒரு களப்பிறக் கலாச்சாரம் உருவாக்கப்பட்டதால் ஏற்பட்ட சிக்கல். அதேசமயம். இந்தப் பெண்ணை தமையன்மார் துரத்தியிருக்கிறார்கள். சகோதரி ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள். இவளை ஏற்று திருத்தி இருப்பார் களோயானால் அது சான்றாண்மை. இவளது அனுபவம் கொடுரம் என்றாலும், தமிழர்கள் இன்னும் சுயமரியாதைக்காரர்களாய் இருக்கிறார்கள் என்பதையும் இவள் விரட்டப்பட்டது, புலப் படுத்துகிறது. ஒங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கும் உண்டு. நானும் என் துணைவியாரும், பல்கலைக்கழக ஆண்டு விடுமுறையில் தமிழகம் வந்து இலக்கியச் சொற்பொழிவுகள் நடத்துவோம். இப்போதைய தமிழக நிலையைப் பார்த்தால், எங்களுக்கே சலிப்புத் தட்டுகிறது. எங்கள் கூட்டம் ஒன்றுக்கு திரைப்பட நடிகர் ஒருவர் தலைமை தாங்க வந்தார். அவரைப் பார்க்க துடியாய்த் துடிக்கும் கூட்டத்தைப் பார்த்து விட்டு, நொந்து போய்விட்டோம். தமிழன், நடிகனின் ஆங்கிலத் தமிழிற்கு கை தட்டுகிறான். ஆன்மீகத் தமிழிற்கு நையாண்டி தருகிறான்."

"இதுக்கெல்லாம், உங்களை மாதிரி தமிழறிஞர்கள்தான் காரணம். சுத்தன். துஷ்டனோட பலன் தரும் என்று மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. சான்றோர்களான உங்களை மாதிரி ஆட்களும், தமிழன் குட்டிச் சுவராகவும், அந்தச் சுவற்றில் அரசியல்வாதிகள் மொய்க்கவும் காரணமாயிட்டிங்க."

எதுவுமே தெரியாத அப்பாவிபோல் இருந்த 'ஐ.ஏ.எஸ். பரீட்சை இளங்கோ போட்ட போட்டில், பேராசிரியர் அசந்து விட்டார். அந்தோணிகூட அவனைத் தட்டிக் கேட்கப் போனான். இளங்கோ இனிமையான குரலில் கடுமையான கருத்துக்களைக் கொட்டினான்.

●。 معاً .