பக்கம்:நிழல் முகங்கள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 சு. சமுத்திரம்

"இலக்கிய பேச்சாளர்களாகிய நீங்களும், மேடைப் பேச்சாளர்களாகிய தலைவர்களும் "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலே முன் தோன்றிய மூத்தகுடி" என்று விஞ்ஞான பூர்வமற்ற கருத்தைச் சொல்லிச் சொல்லி, தமிழனைக் கற்காலத்திலேயே வைத்தீங்க.."

பேராசிரியரும், பேராசிரியையும், இளங்கோ வை ப் பெருமிதத்துடன் பார்த்தார்கள். பேராசிரியர் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு, "நாங்கள் வித்தியாசமான தமிழறிஞர்கள் தம்பி, பெரியார் வழித் தமிழர்கள் தம்பி. நீ சொல்கிற கருத்தைத்தான் சற்றே பழமை வாதத்துடன் சொல்லி வருகிறோம். ஆனால் முற்போக்குத் தமிழனுக்கும், கெட்டதுகளில் நல்லது இருப்பதை கண்டுபிடிக்க இப்போதைக்கு முடியவில்லை என்பதற்கு நீயும் ஒரு உதாரணம். இப்போதைய தமிழறிஞர்களிலே உன்னைவிட வேகமாக சிந்திப்பவர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள். உதாரணத்துக்கு காலஞ்சென்ற இலங்கைத் தமிழறிஞர் கைலாசபதி, நெல்லைத் தமிழறிஞர் வானமாமலை. இன்னும் நம்மிடையே வாழும் பேராசிரியர்கள் சிவத்தம்பி, சாலய் இளந்திரையன். சாலினி இளந்திரையன். பெருஞ்சித்திரனார். சிலம்பொலி செல்லப்பன். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்."

"மனதை புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கய்யா. இவர்களை எனக்கும் தெரியும்."

"நீ டில்லியில் இருக்கும்வரை எனது வீட்டில் தங்கிய பிறகுதான் மன்னிப்பு."

அப்போது, சோமையா உள்ளே வந்தான். கத்தியபடியே வந்தான்.

"யோவ். காலை மிதிச்சுட்டுப் போறியே...? ஒனக்கு கொஞ்சமாவது மூளை இருக்குதா..? டேய் கிருஷ்ணா. கூடுர்ல தப்பிச்சிட்டோமுன்னு மட்டும் நினைக்காதேடா விஜய்வாடாலயும் ரயில் நிற்கத்தான் போகுது. நீ மின்சார விசிறிகளை டைட் பண்ணத்தான் போறே. ஏன் தமிழய்யா வெளிலயே பார்க்கீங்க. அவள் வரமாட்டாள். அவளைப் பார்த்தால். அந்தக் குழந்தையைப் பெற்றவள் மாதிரி தெரியல. பிள்ளையை எவள் கிட்டயோ திருடிக்கிட்டு போகும்போது. இந்தப் பயலைப் பார்த்துட்டு. ரயில் பாலத்துல பயந்துபோய் போட்டிருப்பாள். அப்புறம் இங்கே வந்து நாடகமாடி. குழந்தையை தங்க நகையோட கொண்டு போயிட்டாள். திசமான தாயாய் இருந்தால். சென்ட்ரலுயே குழந்தையைக் கேட்டிருக்கலாமே...? இவள் சரியான கேடி. குழந்தைக் கைய முறிப்பாளோ. காலை முறிப்பாளோ, யோவ்