பக்கம்:நிழல் முகங்கள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 167

கிருஷ்ணா. இந்த ஸ்பேனர்களை துடச்சாவது வைக்கப் படாதய்யா..?”

சோமையா சொன்னதுபோல். அவள் கேடியாக இருக்கலாமோ என்று எல்லோரும் திகிலடைந்தார்கள். ரயில் பயல் தவித்துப் போனான். அந்தோணியின் கையைப் பிடித்து இழுத்தான்.

அதே அந்த ஜி.டி. ரயில், ஒன்பது மணிநேர இடைவெளியில் குளிப்பாட்டப்பட்டு, புதுடில்லி ரயில் நிலையத்தில், ஈரம்பட்ட கோலத்தில் சென்னையை நோக்கி எஞ்சின் முகத்தை திருப்பி வைத்து நின்றது.

போன மச்சான் திரும்பி வந்தான் என்பதை, வறப்போகிறான் என்று சொல்லலாம் என்பதுபோல், பழைய சென்னையில் இருந்து, ரயில் பயலுடனும், மற்றும் பலருடனும் போய்ச் சேர்ந்த அதே ரயில், ரயில்பயல் உள்ளிட்ட ஒருசிலரைத் தவிர, அப்போதைக்கு புதுமுகங்களை சுமந்துகொண்டு புறப்படத் தயாரானது.

இரவு, மெலிதாய் படர்ந்த ஏழு மணி. தாடிக்கார சர்தார்ஜி களும், மொட்டைக் குல்லாய் முஸ்லீம்களும், பைஜாமா பெண்களும், ரயிலுக்குள்ளும், வெளியேயும் வியாபித்திருந்தார்கள். வேட்டி கட்டியவர்கள் கிராமப்புறங்களில் பேண்ட் போட்டவர்கள் போல், அதிசயமாய்க் காணப்பட்டார்கள். அதேசமயம், இட ஒதுக்கீடு இல்லாத மூன்று ரயில் பெட்டிகளில் ஒரே வேட்டி மயம் சேலை மயம். தமிழகத்தில் சேலத்தில் இருந்தும், சின்னாளப் பட்டியில் இருந்தும் வீட்டு வேலைகளையும், எடுபிடி வேலை களையும் செய்யும் ஆண்களும், பெண்களும் நெருக்கியடித்து நெப்பிய அந்தப் பெட்டிகளுக்குள், ஒரு காலத்தில் தமிழில் கையாளப்பட்ட மணிப்பிரவாள நடைபோல், இந்தி-தமிழ் பிரவாளம் எட்டி எட்டிப் பாய்ந்தது. கம்பீரமான புதுடில்லிக்கு களங்கம்போல், தோன்றிய அந்த கம்பீரமற்ற ரயில் நிலையத்தில் பத்து ரயில்கள் ஒட்டப்பந்தயத்தில் ஓடப்போவது போல் நின்றன.

எஸ்.11 பெட்டிக்குள் ரயில் பயல், மஞ்சள் ஸ்வட்டர் துணியோடு, குளிர் பொறுக்க முடியாமல் ஆடிக் கொண்டிருந்தான் அவனை டில்லிவரை வலுக்கட்டாயமாக கொண்டுவந்த அந்தோணி, ஒரு திபேத்காரரிடம் இருந்து முப்பது ரூபாய்க்கு