பக்கம்:நிழல் முகங்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 169

டில்லிக்கு வா. அப்பப்போ அந்த "குயந்தய பார்த்துக்கலாம். அட சரிதாண்டா. கால்கள கீழே போடுடா..."

ரயில் பயல், அந்தோணியை பரிதாபமாய் பார்த்தபடியே, கால்களை கீழே தொங்கப் போட்டான். அந்தக் கால்கள் மாதிரி, அவனும் அந்தரத்தில் தொங்குவது மாதிரி இருந்தது. ரயில் பாலத்தில் இருந்து, தோளில் சுமந்த குழந்தையை அவன் இப்போது கண்ணில் சுமந்தான். அதன் வட்டமுகமும், அவனுடன் தோளிலே முகம் போட்டு ஒட்டிக் கொண்ட லாவகமும் அவன் உடம்பு முழுவதையும் உலுக்கின. எல்லாவற்றிற்கும் மேலாக, அது தன் தம்பியல்ல என்பதும், அவள் தாயல்ல என்பதும், அவனை எப்போதும் கண்டிராத அழுகை உணர்வில் ஆழ்த்தியது. அவனை உற்றுப் பார்த்த சோமையா, வலது கரத்து உள்ளங்கையை பார்த்த படியே நொந்து போனதுபோல் பேசினான்.

"பாரு அந்தோணி. எப்பவுமே, ஆட்களை நான் எடை போடுறதுல. ஒரு கிராம்கூட குறையாது. அந்தப் பொண்ணு கூடுர்லயே இறங்கி குழந்தையோடு போயிடுவாள்னு நினைச்சேன். கடைசில என்னடான்னா ரயிலுக்குள்ளே வந்துட்டாள். புரபஸர் வீட்ல தங்கி இருக்கவும் சம்மதிச்சுட்டாள். என்னோட அபிப்பிராயம் தோத்துட்டு பாரு. டேய் கிருஷ்ணா, பெரிய ஸ்பேனரை விட்டுட்டியேடா..!"

"ஏன் ஸாரே, அந்தப் பொண்ணும் குழந்தையும் சேரவேண்டிய இடத்துல சேர்ந்து நல்லா இருக்கதுக்கு சந்தோஷப்படு. ஒன் உருப்படாத அபிப்பிராயம் தோற்றுப் போனதுக்கு வருத்தப் படாதே."

"டேய் கிருஷ்ணா. வாயா பேசுறே, வாயி. எல்லா நட்டையும் "டைட்" செய்துட்டியா..?"

"இன்னும் ஒரே ஒரு நட்டத்தான் டைட் செய்யனுமாம். அது ஒன்னோட தலையில இருக்கிற நட்டைத்தானாம். சரியான தொன தொணப்பு. ஸார் நீ."

அந்தோணியின் நையாண்டியைக் கேட்டு, சோமையா தவிர, எல்லோரும் சிரித்து விட்டார்கள். ரயில் பயல்கூட தன்னையறி யாமலே சிரித்துவிட்டு, பிறகு சட்டென்று அந்தக் குழந்தையின் நினைவில் மனதைச் சுருட்டினான். டில்லியில், கரோல்பாக்கில் பேராசிரியரின் விசாலமான வீட்டில், ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்த பேராசிரியையின் மடியில் உட்கார்ந்து, இதய தெய்வத்திற்காக இதயத்தில் தாலி கட்டிய சொந்த அம்மா வாயில் திணித்த பிஸ்கட்டைச் சுவைத்தபடியே, அந்தக் குழந்தை இப்போது