பக்கம்:நிழல் முகங்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 சு. சமுத்திரம்

அவனை நோக்கை கையை ஆட்டியது. இப்போது அந்தக் கைகளாலேயே தனது கண்களைப் பதிப்பது போலிருந்தது. அதன் தாய், அவள் என்னதான் மோசமானவளாக இருந்தாலும், அந்தக் குழந்தைக்கு உணவூட்டியபோது, இவன் அழுதுவிட்டான். தனக்கும் இப்படி ஒரு தாய் இல்லை என்றோ, அல்லது தான், அப்படி அந்தக் குழந்தைக்கு ஊட்ட முடியவில்லை என்றோ. ஏதோ ஒரு சுமை. அவன் உள்ளத்தையும் உடம்பையும் இறக்கிக் கொண்டே இருந்தது.

இத்தகைய சுமைகளைச் சுமக்கும் மனிதப் பயணிகளைச் சுமந்தபடி, அந்த யந்திர விசித்திரம், கண்ணன் பிறந்த மதுரா, பைத்தியங்களுக்கு சிகிச்சையளிக்கும் ஆக்ரா, புரட்சிராணி ஆண்ட ஜான்ஸி, ஆயிரக்கணக்கானோரை குருடர்களாக்கி குற்றுயிராய் துடிக்க வைக்கும் போபால், பெரும்பாலான ரயில்களின் சந்திப்புத் தளமான இடார்ஸி, பாரத நாட்டின் பூகோள நரம்பு மண்டலம் எனக் கருதப்படும் விஜயவாடா ஆகிய முக்கியமான நகரங்களின் ரயில் நிலையங்கள், நியாயமான அளவிற்கு நின்று, சென்னை பேசின் பிரிட்ஜ் நிலையத்தில் அநியாயமான அளவிற்கு படுத்து, இறுதியில், சென்னை நகரின் சென்ட்ரல் நிலையத்தில் காலை ஏழு மணிக்கெல்லாம் வந்துவிட்டது.

"என்னடா அவசரம்” என்று தடுக்கப்போன அந்தோணியிடம் இருந்து பலவந்தமாக விடுபட்டு, ரயில் பயல் வெளியே ஓடிவந்தான். தமிழ்ச்செல்வி, அந்த பெட்டியை உற்றுப் பார்த்துவிட்டு, அந்தோணி, சோமையா போன்ற வேற்று மனிதர்களைப் பார்த்து விட்டு, ரயில் பயல் இருக்க மாட்டான் என்ற அனுமானத்துடன் திரும்பப் போனபோது

ரயில் பயல், துள்ளிக் குதித்துப்போய் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான். அவள், அவனைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சியில் நின்றபோது, அவன் "அம். அம்." என்று மாறி மாறிச் சொன்னான். இவ்வளவு பெரிய அம்மா இருக்கையில், எவளோ ஒருத்தி தனக்கு அம்மாவகாக இருக்கலாகாதா என்று ஏங்கியதற்காக, வெட்கப்பட்டதுபோல், அவளைக் கூச்சத்தோடு பார்த்தான். அவளோ, அவனை தன் இடுப்போடு சேர்த்து அணைத்தபடியே, "ஒன்னைப் பார்க்கத்தாண்டா வந்தேன். ஆமாண்டா. பலராம் அண்ணா, நவாப்ஜான் அண்ணாவை எங்கேடா. இன்னைக்கு மட்டும் நீ என் கண்ணுல கிடைக்கலே. அப்புறம். இந்தப் பக்கமா வரக்கூடாதுன்னு தீர்மானிச்சுட்டேன். ரெண்டு நாளாய் ஒங்களைப் பார்க்கதுக்காக வந்து, அந்த ஏமாற்றத்தை தாங்கிக்க முடியாமல் தவித்த தவிப்பு, எங்கம்மா. இறந்தப்போ எப்படித் தவித்தேனோ. அப்படிப்பட்ட தவிப்புடா.." என்றாள்.