பக்கம்:நிழல் முகங்கள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 171

ரயில் பயல், திடீரென்று சிரிப்பை நிறுத்தினான். அந்தக் குழந்தை விவகாரத்தை அவளிடம் அபிநயமாய் சொல்லப் போனவன், அதிர்ச்சியுற்றவனாய் தலையில் கை வைத்தான். பின்னர், அவளுக்கு ஆறுதல் சொல்பவன் போல், நானிருக்கேன் என்பது போல் மார்தட்டினான். என்ன நடந்தது என்பதை விளக்கமாய் சொல்லும், வலது கை விரல்களை மடக்கி பெருவிரலை மட்டும் நீட்டி, கேள்வி கேட்டான்.

தமிழ்ச்செல்லி, அவன் நீட்டிய கையைப் பிடித்தபடியே நடந்தாள். அவன், அவளை வழிமடக்கி, முகத்தை முன்னும் பின்னும் கேள்வித் தோரணையில் ஆட்டியபோது, அவள் மீண்டும் அவனை தன்பக்கமாய் இழுத்துக் கொண்டு, "பொறுடா. ஒன்கிட்டே சொல்லாமல் யார் கிட்டேடா சொல்லப் போறேன்" என்று சொன்னபடியே நடந்தாள். அவனையும் நடத்தினாள்.

இருவரும், அந்த ரயில் நிலையத்தின் சிற்றுண்டி விடுதிக்கு வந்தார்கள். காதால் கேட்க முடியாத, அதோடு வாயற்ற ஜீவன்கள் நடத்தும் விடுதி. காசை எடுக்கப்போன ரயில் பயலின் கையை செல்லமாகத் திருகியபடியே, தமிழ்ச்செல்வி டோக்கன்களை வாங்கினாள். இருவரும், இரண்டு பிளேட் இட்லி வடைகளோடு, வட்ட்மான மேஜையைச் சுற்றிப் போட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். "சாப்பிடுடா" என்று அவள் சொன்னபோது, அவன் வயிற்றைவிட செவிக்கு முக்கியத்துவம் கொடுப்பவன்போல், கைகளை மடித்து வயிற்றில் போட்டான். தமிழ்ச்செல்வி, அவனைக் கண்கலங்க பார்த்தபடியே, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னொரு அத்தியாயத்தைச் சொல்லத் துவங்கினாள்.

“ஒன்கிட்டே சொன்னது மாதிரி ஊருக்குப் போனேன். தாமரைப் பாண்டி, கொலை செய்தாலும் பரவாயில்லை என்கிற விரக்தியோடு போனேன். ஏன்னா ஒங்கப்பா சுந்தரத்தோட மனைவி. என்னை ஏற்கெனவே கொலை செய்துட்டாங்க. அதனால ஊருக்கு வெறும் உடம்போடதான் போனேன். அதோடு தாமரைப்பாண்டி என்னை அடிக்காமல் இருந்தாலே பெரிய காரியம் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் முழுச் சொத்தையும் அவன் கொடுக் காட்டியும், பஞ்சபாண்டவர்கள், கெளரவர்கள்கிட்டே கேட்டது மாதிரி மூன்று காணி நிலமாவது கொடுப்பானான்னு பார்க்கலாமு ன்னு ஒரு நப்பாசை. அவன் ரயிலுல போலீஸ் முன்னால் பேசுனது பொய்யுன்னு எனக்குத் தெரியும். அந்தப் பொய்யிலயும் ஒரு மெய் இருக்குமான்னு கண்டுபிடிக்க ஒரு ஆசை.”

"என் ஆசை நிராசசையாய் போயிட்டுதடா. ஊருக்குள்ளே. துழைஞ்சவுடனேயே, எல்லோரும் என்னை ஒரு மாதிரியாய்