பக்கம்:நிழல் முகங்கள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சு. சமுத்திரம்

பார்த்தாங்க. ஒருத்தன், ஊரை குட்டப்புழுதியாக்க வந்துட்டாள்"னு கூட சொன்னான். நான் எதுவுமே புரியாமல் திரும்பிப் பாராமல் நடந்தேன். "ஏம்மா, தாயி. தாயின்னு" சத்தம் கேட்டு நின்றேன். தாமரைப் பாண்டியனோடு. என்னைக் கடத்திக்கிட்டு போக வந்தாரே. பண்ணையாள். அவர் வந்து. எனக்கு முன்னால் நின்னு அழுதாரு கேவிக்கேவி, விம்மிவிம்மிச் சொன்னாரு"

"ஏம்மா. தமிழ்ச்செல்வி. இந்த ஊருக்குள்ளே எதுக்கும்மா வந்தே...? தாமரைப் பாண்டி. "நீ ரயிலுலயே தாசித் தொழில் செய்யுறதாய் ஊர் முழுக்க சொல்லிட்டாம்மா. ஒரு நாளைக்கு கண்டவன்கூடல்லாம் சல்லாபித்து ஐநூறு ரூபாய் சம்பாதிக் கிறேன்னு கூசாமல் சொல்லிட்டாம்மா. ரயிலுல ஒனக்காக நான் சப்போர்ட் செய்தேன்னு. என்னை வேற, அடி அடின்னு அடிச்சு. தலையை மொட்டையடிச்சு. மரத்துல கட்டி வச்சுட்டாம்மா. மூணு மணிநேரம் மரத்தோட மரமா இருந்தேம்மா. உங்க அம்மாவைப் பார்த்துட்டு. சீக்கிரமாய் போயிடும்மா. முடியுமானால் என்னையும் கூட்டிப் போம்மா. இல்லாட்டி என்னை தாமரைப் பாண்டியனும், ரத்தினவேலும், அடித்தே கொன்னுடுவாங்கம்மா. ஒன் சின்ன மாமா மகன் வைத்தியலிங்கத்தை போலீஸ் விலங்கு போட்டு கூட்டிட்டுப் போனாங்கம்மா. அப்புறம் எதையோ எழுதி வாங்கிட்டு விட்டுட்டாங்கம்மா..!

"அந்த அப்பாவி பண்ணையாளுக்கு கண்ணிரால் பதிலளித்து விட்டு, சின்ன மாமா வீட்டுக்குள் போனேன். மாமாவும் அத்தையும் "வா” என்று கேட்கவில்லை. அதேசமயம் "போ” என்றும் சொல்ல வில்லை. அவர்கள் குழம்பிப் போயிருப்பது நன்றாகவே தெரிந்தது. ஆனால் மாமா மகன் வைத்தியலிங்கம். என் கையைப் பிடித்துக் கொண்டு ஏங்கி ஏங்கி அழுதான். அவன் முதுகிலும் மார்பிலும் லத்திக் கம்புச் சுவடுகள் தெரிந்தன. அப்போதுகூட அவன், கவலைப் படாதீங்க அண்ணி. லத்திக்கம்பு நாலடிதான் பாயும். ஆனால் நியாயம் ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் பாயும் என்று சொன்ன போது நான் அவனைக் கட்டிப்பிடித்து அழுதேன்."

"சிறிது நேரத்திற்கு பிறகு. மாட்டுக் கொட்டடிக்குப் போனேன். அம்மா அங்கே வழக்கம்போல் உட்கார்ந்திருந்தாள். எந்தவிதச் சலனமும் அற்றுப்போய் ஏதோ இருக்கிறோம் என்பதுபோல், எண்சாண் உடம்பை முச்சானாய் குறுக்கியபடி உட்காந்திருந்தாள். "அம்மா" என்று கூறியபடியே அவளைத் தொட்டேன். ஆனால் அவளோ திடீரென்று என் மேல் பாய்ந்தாள். என் தலையிலும் கன்னத்திலும் மாறி மாறி அடித்தாள். பிறகு, தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள். என்னைக் காறித் துப்பினாள். பிறகு