பக்கம்:நிழல் முகங்கள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 173

செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதுபோல், மீண்டும் இருந்த இடத்திற்கே சென்று தன்னைக் குறுக்கிக் கொண்டான். எனக்கும் அப்போது அம்மாமீது கோபம்தான் வந்தது. என்னைப் பற்றிய அவதூறுப் பேச்சு காதில் விழுந்ததாலும், அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தாக்குகிறாள் என்பதை மறந்து விட்டேன். அவள் பெரியண்ணன் மீது நம்பிக்கை வைத்து, நாடிழந்து, வீடிழந்து போன நிலைமையை மனதில் வைத்துக்கொண்டு, இதுக்கெல்லாம் நீதான் காரணம். நீயே காரணமுன்னு கத்திட்டு வீட்டுக்குள் வந்தேன்."

'அன்றைக்குப் பகல் முழுவதும், சின்னமாமா வீட்டுக் குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். மனசு கேட்கல. அந்த நாள் வரைக்கும் என்மேல் செல்லமாகக்கூட அடிக்காத அம்மாவைப் பார்க்க கொட்டடிக்குப் போனேன். அம்மா விறைத்துக் கிடந்தாள். வாயெல்லாம் ஈ மொய்க்க என் அம்மா.. என்னை வயிற்றுக்கு உள்ளேயும் வெளியேயுமாக சுமந்த என் தெய்வம். போயிட்டாள். அவள் போனதைக் கூட தாங்கிக்கலாண்டா. ஆனால், மகள் விபச்சாரி என்கிற நெனப்புல போயிட்டாளே. அதைத்தாண்டா. என்னால தாங்கிக்க முடியல. அம்மா நான் உன் மகள், அப்படிப் பட்ட காரியம் செய்கிற கயத்தி இல்லன்னு சொல்லாமல் போயிட்டேன் பாரு.. அதைத்தாண்டா தாங்கிக்க முடியல. ஒருவேளை நான் அப்படிச் சொல்லியிருந்தால். அம்மா இறந்திருக்க மாட்டாள். இல்லியாடா..? சொல்லுடா..?

ரயில் பயல், சாப்பாட்டுத் தட்டை ஒதுக்கி விட்டு, அவளையே பார்த்தான். அம்மாவின் அம்மாவான தனது சொந்தப் பாட்டி இறந்ததுபோல் துக்கித்துப் பார்த்தான். அந்த ஆறுதலில் தமிழ்ச் செல்வி லேசாகச் சிரித்தாள். பிறகு, ஒரு செய்தியைச் சொன்னாள்.

என க் கு ஒரு வேலை கி டச் சி ரு க்கு டா... அது ல சேர்ந்துட்டேண்டா. ஆனாலும் தமிழர்களைக் காட்டிக் கொடுக்கிற வேலையோன்னு பயமாய் இருக்குதுடா.”