பக்கம்:நிழல் முகங்கள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്ക്ക

அதே அந்த ஜி.டி. ரயில் இப்போதும் எஸ். பெட்டியில் பழைய முகங்களையும், புதிய முகங்களையும் சுமந்தபடி, கூடுரை விட்டு, விஜயவாடாவை நோக்கி புலிப் பாய்ச்சலில், உறுமியபடியே ஒடியது.

பழையவர்கள் தங்களுக்குள் பேசி முடித்துவிட்டு, புதியவர் களை உற்றுப் பார்த்தநேரம். எவ்வளவு நேரந்தான் சும்மா இருப்பது என்பதுபோல், புதியவர்கள் புன்னகைத்த வேளை. இரவின் துவக்கப் பிரவேசம்.

எஸ். பெட்டியில் தென்பகுதியில் பலராமன், நவாப்ஜான், தாராயணன் வகையறாக்கள். இதையடுத்து ரயில் பயல், அவனுக்கு அருகே. ஜன்னலோர இருக்கையில் தமிழ்ச்செல்வி. எதிர் இருக்கையில் ஜன்னலோரம் ஜிப்பா போட்ட ஒல்லி மனிதர். வாழ்விற்கும் சாவிற்கும் இடைப்பட்ட வயதுக்காரர். இவருக்கு அருகே பன்னிரண்டு வயதுச் சிறுவன். அவனையடுத்து, ஒரு இளைஞன். இருபத்தைந்து வயதிருக்கலாம். நிர்மலமான கண்கள். காக்காபொன் மாதிரியான கறுப்பு. கடப்பா கல், பாளம் பாளமாய் இருக்குமே அப்படிப்பட்ட தோரணை. இரும்பைக் காய்ச்சி, அதற்குக் ரத்த சாயத்தை பாய்ச்சி, கறுப்புத் தோலால் போர்த்தப் பட்டது போன்ற லாவகம், மொத்தத்தில் இன்னின்ன உறுப்புக்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதைச் சொல்வதுபோன்ற தோற்றக்காரன். இவனையடுத்து அங்கிபோட்ட ஒரு நடுத்தரம். அவருக்கு ஒருபுறம் ஒரு நாயர் சிவப்புச் சிவப்பான கிழட்டு நாயர்.

தமிழ் ச் செல் வி , தனது தோழ ன் களு டன் சிரிப்பும் சிந்தனையுமாய் பேசிக் கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் மாதத்தில் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ அவள் இவர்களோடு சேர்ந்து வருவதும், ரயில் பயலோடு நாக்பூரில் இறங்கி, தமிழக ஜி.டியில் ஏறுவதும் பழகிப் போய்விட்டது. அந்தோணியும் சோமையாவும் கூட இவளுக்கு அண்ணன் தம்பிகளாகி விட்டார்கள். சமையலறையில் உள்ள அனைவருமே அத்துபடி பெரும்பாலும் ரயில் பயலோடு சமையலறைக்குள் போய் கத்திரிக்காய் கழுவிக் கொடுப்பதும், காய்கறிகளை வேக வைப்பது முதல் பாத்திரங்களை கழுவுவது வரை பழக்கமாகி விட்டது. தலைமைச் சமையல்காரன் அண்ணாமலை எவ்வளவோ தடுத்துப் பார்த்தும், "சாப்புடுற சோத்துக்கு உழைக்கணும். இல்லன்னா வயிறு ஒத்துழைக்காது" என்று சொல்லிவிட்டாள்.