பக்கம்:நிழல் முகங்கள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 175

பழைய காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் நாட்டுப்புறக் கதைகளில் "ஒரே ஒரு ஊரில... ஏழு அண்ணன் தம்பிகள் அவர்களுக்கு ஒரே ஒரு செல்லத் தங்கச்சி" என்று வரும் ரயில்வே தொழிலாளர்களுக்கு, அவள் அப்படிப்பட்ட செல்லத் தங்கச்சியாக மாறிவிட்டாள். ஜிப்பாக்காரர், அவளையும், அவள் பேச்சையும் உற்றுக்கேட்டு, அவளின் பூர்வோத்திரத்தை ஒரளவு தெரிந்து கொண்டார் பலராமன், ஏதோ பேச்சு வாக்கில் அவளைச் செல்லமாகச் சாடினான்.

"இன்னாமம்மா. நீ பத்து லட்சம் ரூபாய் சொத்தையும் அப்படியே விட்டுட்டியே..? அந்தக் கம்மனாட்டிமேல கோர்ட்ல வழக்கு போட்டிருக்கணும். எத்தன வருஷமுன்னாலும் ஆகட்டுமே?”

"எண்ணன்னா. சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்றே.”

"அதுக்குப் பேர்தான் பலராமன்."

"நீ சும்மா இரு. நவாப்புக்கு கோர்ட்டு வழக்கு என்கிறது குதிரைக் கொம்பு மாதிரி, ஏழைக்கு அங்கே இடம் இல்லை. கோர்ட் தேவதையின் துவார பாலகர்களான வக்கீல்கள் கிட்டே கூட நெருங்கமுடியாது. என் பெரிய மாமா பத்து லட்சம் ரூபாய் சொத்தை மோசடி செய்தது கிரிமினல் குற்றம் இல்லியாம். சிவில் தானாம். சொத்து வேணுமுன்னு உயர்நீதிமன்றத்தில் எவ்வளவு ரூபாய் சொத்துகேட்டு வழக்குப் போடுறோமோ அவ்வளவுக்கும் ஆயிரத்துக்கு 75 ரூபாய் வீதம் ஸ்டாம்ப் பேப்பர் வாங்கணுமாம். அதாவது என்னோட பத்துலட்ச ரூபாய் சொத்துக்கு நான் எழுபத்தையாயிரம் ரூபாய் ஸ்டாம்ப் வாங்கணும். வக்கீலுக்கு வேற ரூபாய் கொடுக்கணும் என்ன சட்டமோ என்ன கோர்ட்டோ. இந்த லட்சணத்துல கோர்ட்ல பெஞ்ச் கிளார்க்குகள் குதிக்கிற அட்டகாசம் வேறு. முயற்சி செய்துதான் விட்டுட்டேன். அப்படியே சொத்து கிடைக்கிறதாய் இருந்தாலும், நான் கிழவியான பிறகுதான் கிடைக்கும். சட்டம் ஒரு இருட்டறைன்னு அண்ணா சொன்னது சரிதான்.”

ஜிப்பாக்காரரால் பேசாமல் இருக்க முடியவில்லை.

"நீங்க சொல்றது சரிதாம்மா. இந்த நாட்டுச் சட்டம் இருக்கே அது குப்பையிலும் குப்பை படு குப்பை. உதாரணமாய் ஒன்னோட வீட்டை நான் சப்ரிஜிஸ்தரார் ஆபீஸ்ல போய் பத்திரம் பதிவு செய்து இன்னொருத்தருக்கு விற்றுடலாம். நீ இல்லாத சமயத்துல, உன் வீட்ல நான் யாருக்கு விற்றேனோ அந்த ஆசாமி போய் இருந்துக் கலாம், ஒன்னால ஒன்றும் செய்ய முடியாது... போலீஸ்காரன் காசு வாங்கிட்டு சும்மா இருந்துடுவான். நீ கீழ்