பக்கம்:நிழல் முகங்கள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 சு. சமுத்திரம்

கோாட்ல ஜெயிச்சால். அவன் மேல் கோர்ட்ல ஜெயிப்பான். நீ உயர்நீதிமன்றத்துல ஜெயிப்பே. பெஞ்சில தோற்கடிக்கப்படுவே. இந்த நாட்ல நீதிபதிகள் இருக்காங்க.. ஆனா நீதிதான் கிடைக்கல."

"நல்லவேளை. எனக்கோ. இந்தப் பயலுக்கோ வீடு இல்ல." "நீ வேலைக்குப் போறியா..?”

"ஆமாம்."

"என்ன வேலைம்மா..?"

"ஏதோ ஒரு வேலை." நவாப்ஜான், ஜிப்பாக்காரரிடம் முறையிட்டான். "இப்படித்தான் ஸார், இந்த ஸிஸ்டர் பெருமையாய் பேச வேண்டிய வேலையைப் பற்றி மூச்சுவிட மாட்டாள். அம்மாவுக்கு சென்னை வானொலி நிலையத்தில் செய்தி வாசிக்கிற வேலை. மாதம் ஆறுநாளைக்கு வேலை. சாயங்காலம்தோறும் வெளிநாட்டுச் செய்திகளை படிக்கணும். டெய்லி நூறு ரூபாய். ஆறுநாளைக்கு அறுநூறு ரூபாய்."

"சும்மா இரு அண்ணா. ஏதோ குற்றம் செய்யுறதுமாதிரி இருக்குது." -

"நானும் ஒரு பத்திரிகையில் செய்தியாளனாய்த்தான் வேலை பார்க்கேன். இப்போ நியூஸ் ரிப்போர்ட்டிங் சம்பந்தமாத்தான் டில்லி போறேன். ஒங்களுக்கு ஏன் அப்படி ஒரு குற்றவுணர்வு வருதுன்னு தெரிஞ்சுக்கலாமா."

"சொல்றேன். ஸார். வெளிநாட்டுச் செய்திகளில், எல்டிடியில் இத்தனை பேர் கொல்லப்பட்டார்கள். இந்த இயக்கம் சொந்த சோதரர்களையே கொல்கிறதுன்னு செய்தி வாசிக்கும்போது நான் ஏதோ தப்புச் செய்யுறது மாதிரி தெரியுது.”

'ஒங்களை யாரும் தமிழ்த் துரோகின்னு சொல்லிடுவாங் களோன்னு பயம். அப்படித்தானே.”

"சரியா சொன்னிங்க ஸார். இவ்வளவுக்கும் பாவம். அந்த வானொலி செய்தியாசிரியர் என் கஷ்டத்தை உணர்ந்து, மனிதாபிமான அடிப்படையில்தான் வேலை கொடுத்தார்."

"நீங்க எல்.டி.டி.இ ஆதரவாளரா.?"

'இல்ல எனக்கு பிரபாகரனும், பத்மாநாபாவும் சீறி சபாரத்தினமும், குட்டி மணியும், கண்டித் தமிழர்களை காப்பாற்றுகிற தொண்டைமானும் ஒரே மாதிரி. பிரபாகரனும்,