பக்கம்:நிழல் முகங்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சு. சமுத்திரம்

கீழே இறங்கிய சிறுவன், ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிரமப்பட்டு நின்று ஆரஞ்சுப் பழங்களை பொறுக்கு வதற்குக் குனியப் போனான். வலைப் பனியனும், ஒற்றை மடிசார் வேட்டியும், மராத்தித் தொப்பியும் வைத்திருந்த கிழவனுக்கு மனக கேட்கவில்லை. அந்தப் பயலை கைகொடுத்துத் தூக்கி விட்டான். பிறகு, கூடையில் "ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு' என்று இருந்த ஆரஞ்சுப் பழத்தை அந்தப் பயலிடம் நீட்டினான் பயலோ, அதை வாங்கிக் கிழவனுக்கே திருப்பிக் கொடுத்தான். இறுதியில், அந்த ஊனப் பழத்தை வாங்கிக் கொண்ட சிறுவன், அப்போதுதான் துரத்தியவனின் நினைவு ஏற்பட்டதுபோல், திடுக்கிட்டு நாற்புறமும் சுற்றிப்பார்த்தான். பிறகு, முண்டாசுக்காரன் கூட்டத்திற்குள் மறைந்துவிட்ட திருப்தியில், பிளாட்பாரத்தில் நிதானமாக நடந்தான்.

அந்தச் சிறுவன் சிறிது சிறிதாய் நடந்து, ரயிலின் சாப்பாட்டுப் பெட்டிக்கு அருகே வந்தபோது, திடீரென்று வீறிட்டுக் க்த்தினான். வாயில் வைத்திருந்த மிச்சம் மீதி ஆரஞ்சுச் சுளைகளைத் துப்பியபடியே அப். அப்." என்றான். நரி போல் ஊளையிட்டான். முண்டாசின் கிடுக்கிப் பிடியில் நடுநடுங்கியபடியே முனங்கினான். சிறுவனின் தலையைக் க்ாலிடுக்கில் வைத்தபடியே முண்டாகக் காரன், "நீ இன்னிக்கு என் கிட்டே இருந்து தப்பவே முடியாது" என்றான். கால்களை விரிவாக்கி, பயலின் தலையைத் தூக்கிப் பிடித்து நிறுத்துவதற்காக முண்டாசு குனிந்தபோது

அந்தச் சிறுவன், முண்டாசுக்காரனின் காலைக் கடித்தான். அந்தக் கடி கொடுத்த வலியைவிட, எச்சில் பட்ட அசூயையில், முண்டாக கால்களை மேலும் மேலும் அகலமாக்கியபோது, அந்தப் பயல் காலிடுக்கில் சிக்கிய தலையை, ஆமைபோல் பின்னால் இழுத்து, முண்டாசுக்காரனின் முதுகையே ஆதரவாய்ப் பிடித்தபடி எழுந்தான். எழுந்த வேகத்தில் ஒடினான். முண்டாகக்காரன் முன்னிலும் அதிக வேகமாய் அவனைத் துரத்தினான். மீண்டும் ஒட்டமும், துரத்தலும். எதிரே வந்த தள்ளுவண்டி விளையாட்டுப் பொம்மை வியாபாரி, பயல் வண்டியில் மோதி, பொம்மைகள் தரையில் விழுந்து, அன்றைய வாழ்க்கை பொம்மை வாழ்க்கையாய் ஆகிவிடக்கூடாதே என்ற பயத்தில், அவனைப் பிடித்தார். அப்போது அங்கே ஓடிவந்த முண்டாசுக்காரன் அவனிடமிருந்து அந்தப் பயலைப் பறித்துக் கொண்டான்.

அந்தச் சிறுவன், இப்போது நடப்பது நடக்கட்டும் என்பது போல் வீறாப்பாக நின்றான் பயலுக்குப் பதினான்கு வயதிருக்கலாம். வயதுக்கேற்ற உடம்பில்லாதவன். ஒட்டடைக் கம்பு மாதிரியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/19&oldid=588175" இலிருந்து மீள்விக்கப்பட்டது