பக்கம்:நிழல் முகங்கள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 177

பத்மநாபாவும், மாத்தையாவும், வரதராஜப் பெருமாளும் நல்லா இருக்கணும். என்பது என் ஆசை. இவர்களைவிட இலங்கைத் தமிழர்கள் நல்லா இருக்கணும். என்கிறது என் பெரிய ஆசை, பிரார்த்தனை."

"இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உங்கள் கருத்தென்ன..?”

“சிங்கள ராணுவத் தாக்குதலில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றிய பிராபாகரனுக்கு தலை வணங்குகிறேன். யாழ்ப்பாண பலாலி முகாமில் சயனைடை சாக்லேட் மாதிரி சாப்பிட்ட பதிமூன்று தமிழ் சோதரர்களுக்காக கண்ணிர் விடுகிறேன். தண்ணிர்கூட அருந்தாமல் உயிர் நீத்த, வரலாறு படைத்த திலீபன் தோழனுக்காக அழுகிறேன். அதேபோல் கிழக்குப்பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான சிங்கள அப்பாவிங்க.. குறிப்பாய், குழந்தைகள், பெண்கள் படுகொலை செய்யப்பட்டதுக்கு மனதுக் குள்ளேயே ஒப்பாரி வைக்கிறேன். தமிழர்கள் எந்த இனத்திற்கும் தாழ்த்தி இல்லை என்றால் அது அவமானம். அதுவே உசத்தி என்று பேசப்பட்டால் பாஸிஸம். இனவாதமே மனிதாபிமானமற்ற காரியங்களால் எழுவது, அதே வாதத்தில் வளர்ந்தவர்கள், பிற இனத்தையும் படுகொலை செய்வது. மன்னிக்கக்கூடியதும் அல்ல. மறக்கக்கூடியதும் அல்ல."

Tப்பா, தெம்போடு பேசினார்.

"நீயே. தமிழ்நாட்ல, உன் கண்ணால பார்த்திருப்பே. சிங்கள ராணுவம், தமிழர்களை தாக்கியபோது, இங்கே தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நின்றார்கள். கதவடைப்பு செய்தார்கள். துயர் துடைப்பு நிதிக்கு உதவினார்கள். சிங்களத்தலைவர்களின் கொடும்பாவிகளை கொளுத்தினார்கள். இப்போ எந்தத் தமிழர்களைக் காப்பாற்றினார்களோ, அந்தப் போராளிகள் வவுனியா காட்டுக்குள்ளே வாடிக் கிடக்கும்போது. இங்குள்ள தமிழர்கள் மூச்சு விடவில்லை. காரணம் எல்.டி.டி. இயக்கத்திற்கு நிர்வாகக் கவுன்சிலில் ஏழு பேர் இருக்க வாய்ப்பளித்தபோது, அதை தட்டிவிட்டது தவறானதுன்னு தாயகத் தமிழர்கள் நினைக்காங்க. பாகிஸ்தான் உருவாவதற்கு சம்மதிக்காத மகாத்மாகாந்திகூட இறுதியில் பிரிவினைக்கு சம்மதித்தார். வீடாகட்டும், அரசியல் ஆகட்டும் ஏதாவது ஒரு கட்டத்துல கொஞ்சம் விட்டுக் கொடுத்துத் தான் ஆகணும். அதனால் நான் என்ன சொல்றேன்னா. நீங்க செய்தி படிக்கிறதுல குற்றவுணர்வு வரப்படாது. வந்தால் வேலையை விட்டுடனும். அதோட பிறத்தியார் நம்மை துரோகின்னு சொல்லிடுவாங்களோன்னு நினைத்து நம் கருத்தையோ செய்கையையோ மாற்றி, நமக்கு நாமே துரோகம் பண்ணிக்கப் படாது.”