பக்கம்:நிழல் முகங்கள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 சு. சமுத்திரம்

"உங்க பேச்சைக் கேட்ட பிறகு, தெம்பாய் இருக்குது ஸார். நீங்க இலங்கைக்குப் போயிருக்கீங்களா..?

"பல தடவை போயிருக்கேன். யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திரிகோணமலை, உட்பட எல்லா இடங்களுக்கும் போயிருக்கேன். அமைதிப்படை போன புதிதில் செய்தியாளர்கள் போனோம். அப்போ தமிழ் சோதர சோதரிகள் எங்களை கையாட்டி ஆரவாரம் செய்தது இன்னும் அப்படியே கண்முன்னால் நிற்குது. அப்புறம் விடுதலைப் புலிகளுக்கும் அமைதிப்படைக்கும் நடந்த சண்டையில் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் கையிழந்து, காலி ழந்து. கிடந்தவர்களைப் பார்த்துக் கண்ணிர் விட்டோம். இதுக்குப் பிறகு வரதராஜப் பெருமாள் திரிகோணமலையில் முதலமைச்சராய் பதவியேற்ற மறுநாள், யாழ்ப்பாணத்தில். மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பேசினார். அங்கங்கே வெடி வெடிச்சுது. மக்கள் அசையல. இது வீரத்தின் விளைவா..? இல்ல. விரக்தியோட விளிம்பு. எப்படியாவது தொலையட்டும். என்பது மாதிரியான சிந்தனை. ஒரு காலத்தில் எங்களைப் பார்த்து அன்போடு கையாட்டியவர்கள் இப்போது கண்டிப்போடு பார்த்தாங்க எவ்வளவோ கேள்வி கேட்டோம். பேயறைஞ்சது மாதிரி இருந்தாங்களே தவிர, பதில் பேசல."

ஏதோ சோகத்தில் ஆழ்ந்ததுபோல் தமிழ்ச்செல்வியும், ஜிப்பாக்காரரும் தலைகளைத் தாழ்த்திக் கொண்டார்கள். சொந்தக் குடும்பத்தில் ஏதோ துக்கச் சம்பவம் நடந்துவிட்டது மாதிரியான துயரச் சாயலோடு நிசப்தம் நிலவியபோது

அங்கிக்காரர் கத்தினார்.

"ஏய்யா. ஒடுற ரயிலுலயுமா தமிழ்த்துரோகம் செய்கிறே.? சரியான எட்டப்பன் நீ இலங்கைத் தமிழன் தினமும் சாகிறான். "தம்பி, வவுனியா காட்டில் இருந்து உரிமைப்இைைதைமடை.போர் புரிகிறான். துரோகிகள் பத்மாநாபாவும், வரதராஜப் பெருமாளும் தமிழனைக் காட்டிக் கொடுக்கிறாங்க. உனக்கு என்னடான்னா இது புரிய மாட்டேங்குது. எல்.டி.டி.இ. ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டது மாதிரி பேசுறே. இனிமேல் மட்டும் பேசின்ே."

ஜிப்பாக்காரர், அவர் பேச்சை சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டவர்போல், சிறிது சிரித்தார். பிறகு, சீரியஸாகவே பேசினார்.

"எல்.டி.டி. இயக்கத்தைப் பற்றி மற்றவங்க விமர்சிக்கிறதுக்கும், நாம் விமரிசிக்கிறதுக்கும் வித்தியாசம் உண்டு. என்னோட விமர்சனம் ஒரு குடும்பத்தில் உள்ள தம்பியை அவன் நல்லா