பக்கம்:நிழல் முகங்கள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 179

இருக்கணும் என்று அண்ணன் விமர்சிப்பது மாதிரி. தமிழ்சாதி அழிந்து போகணுமுன்னு பிரபாகரனுக்கு சில பத்திரிகைகாரங்க ஆதரிக்கது மாதிரி கொம்பு சீவி விடுறாங்களே. அப்படிப்பட்ட செய்தியாளன் அல்ல."

"நீ செய்தியாளன் இல்ல. துரோகி. பச்சைத் தமிழ்த்துரோகி. காட்டிக் கொடுப்பவன். கூட்டிக் கொடுப்பவன்."

பலராமனால் பொறுக்க முடியவில்லை.

"யோவ். அங்கிக்காரரே. கூட்டிக் கொடுப்பவன்னு சடார்னு சொல்றியே...? ஒனக்கு மூளை இருக்குதா..? இதே கேள்வியை எங்களைப் பார்த்துக்கூட கேட்பே. ஒனக்கு இங்கே இடம் கொடுத்ததே தப்பு. எழுந்திருய்யா."

ஜிப்பாக்காரர், அந்தச் சூழலை லேசாக்க நினைத்துப் பேசினார்.

"அந்த அர்த்தத்திலே அவர் சொல்லியிருக்க மாட்டார். காட்டி என்கிற வார்த்தைக்காக கூட்டி என்கிற வார்த்தையைச் சொல்லிட்டார். அவ்வளவுதான். தமிழ்நாட்டு அரசியலே, வார்த்தை ஜாலத்திலேதானே சிறைப்படுத்தப்பட்டிருக்கு எதுவரைக்கும் சார் போlங்க?"

அங்கிக்காரர், அங்குலம் அங்குலமாக குழைந்து பேசினார்.

“எங்க தலைவர் டில்லியில், தமிழக சட்டப்பேரவைத் தேர் த லி ல் கூட் டு ைவ ப் பது சம்ப ந் த மா ய் பி ர த மர் ராஜீவ்காந்தியோடு பேச்சு நடத்த, ஏ.சி. பெட்டியில் போறார். நான் அவருக்கு ஒத்தாசையாகப் போறேன்."

'அதாவது காங்கிரஸ் கட்சியோட தேர்தல் உடன்பாடு ஏற்பட்டால், இலங்கைத் தமிழர்களை பாரதம் காப்பாற்றி விட்டதுன்னு பேசுவீங்க கூட்டு இல்லையென்றால், இலங்கைத் தமிழர்களை, இந்தியப்படை கொன்று குவிக்குதுன்னு சொல்வீங்க”

அங்கிக்காரர், அந்த ரயில்பெட்டி, தமக்கு ஏறுக்கு மாறானவர் களால் நிறைந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். அதோடு, இலங்கைத் தமிழர்களைப் பற்றி தனது தலைவர், தேர்தல் பேச்சின் முடிவுக்குப் பிறகே ஒரு முடிவெடுப்பார் என்பதை உணர்ந்தார். தலைவரிடம், தனது சிந்திக்கும் பொறுப்பை ஒப்படைத்த அந்த வெறும் தலைக்காரர் வினயமாகப் பேசினார்.

"என்ன ஸார் நீங்க. சும்மா பொழுது போகாமல் பேசிக்கிட்டு

இருக்கோம். இதைப்போய் பெரிசாய் எடுத்துட்டு. என்னைச் சுற்றி ஆணி அடிக்கப் பார்க்கீங்களே."