பக்கம்:நிழல் முகங்கள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I& 9 சு. சமுத்திரம்

அங்கிக்கும், ஜிப்பாவுக்கும் இடையே இருந்த அந்த இளைஞன், அங்குமிங்குமாக தலையைத் திருப்பினான். பிறகு, அருகே இருந்த அந்த சிறுவனைத் துக்கி நிறுத்தினான். அவன் கால் சட்டைக்குள் போட்டிருந்த கையை வெளியே தூக்கிக் காட்டினான். அதைப் பார்த்துவிட்டு எல்லோரும் அதிர்ச்சியுற்ற போது, அந்த இளைஞன் கத்தினான்.

تعقي

அந்த ரயில், மேடு மேடாக ஏறி, பள்ளம் பள்ளமாக இறங்கி எல்லோரையும் புரட்டிப் போடப்போவது போன்ற தோரணையில், அந்தக் காட்டுப் பகுதிக்குள் காட்டுத்தனமாக பாய்ந்து கொண்டு இருந்தது.

சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்துப் பெட்டிக்காரர்கள் கூடி விட்டார்கள். ரயில் பயல், தமிழ்ச்செல்வியை பயத்தோடு பிடித்துக் கொண்டான். அந்த இளைஞன், தான் கத்தியதற்கு வருந்துபவன் போல் சிறிது தலைகுனிந்தான். பிறகு, தலைகுனியவேண்டியது தானல்ல என்பதுபோல், நிமிர்ந்து பார்த்தான். இப்போது ரயில் பயல், அந்தச் சிறுவன் கையை பிடித்துக் கொண்டான். அது வலது கை மணிக்கட்டுக்கு மேல் எதுவும் இல்லாமல் மொக்கையாக இருந்தது. உள்ளங்கையோ. புறங்கையோ இல்லாத நொண்டிக்கை. அந்த இளைஞன், எல்லோரையும் பொதுப்படையாக பார்த்த படியே, உணர்ச்சி ததும்பப் பேசினான்.

"இதோ இந்தக் கையைப் பாருங்கள்! இவன் என்ன பாவம் செய்தான் தெரியுமா..? யாழ் நகரில் ஆஸ்பத்திரியில் அடிபட்டுக் கிடந்த தந்தைக்கு சோறு கொண்டு போனான். அப்போது, போராளிகளுக்கும் இந்தியப் படைக்கும் இடையே நடந்த போரில் இவன் அரவ்ானாக்கப்பட்டான். எங்கிருந்தோ வந்த குண்டு இவனை இப்படி ஆக்கிவிட்டது. இவனைப்போல் எத்தனையோ போர். எங்கள் தேசத்தில் மானுடம் மூடமாகிவிட்டதய்யா. வெந்த புண்ணில் வேல் பாய்ப்பதுபோல் கதைக்காதீர்கள். கடற்கரையில் நிற்கும் உங்களால் கடலில் தவிக்கும் எங்கள் இடர்ப்பாடுகளை புரியமுடியாது. அமைதிப்படை சுட்டுட்டு கூடாரத்துக்குப் போகிறது. போராளிகள் அடித்துட்டு காட்டுக்குப் போகிறார்கள். இடையிலே, அகப்பட்டு, சாகாமல் சாவது இந்த மாதிரி