பக்கம்:நிழல் முகங்கள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 181

பொடியன்கள். நீங்கள் எங்களுக்கு செய்ய வேண்டியது இந்தக் காலக்கட்டத்துல பேசாமல் இருக்க வேண்டியதுதான். உங்கள் பொழுதுபோக்கிற்கு உயிரோட சாகிற நாங்களா கிடைத்தோம்."

அந்த இளைஞன், அந்தச் சிறுவனை அங்கேயே விட்டுவிட்டு வெளியே வந்தான். பொது வழியின் ஜன்னலோரத்தைக் குனிந்து பார்த்தான். பிறகு நிமிர்ந்து மீண்டும் வந்து தன் இருக்கையில் உட்கார்ந்தான். அவன் உடம்பு இரும்பைக் காய்ச்சி தண்ணிரில் முக்கியது போல் கொதித்தது. தமிழ் ச் செல்வி அவனைத் தத்தளிப்பாகப் பார்த்தாள். இருக்கையில் இருந்து எழுந்து, அந்தச் சிறுவனின் மொட்டைக் கையை அவன் பேண்ட் பைக்குள் திணித்துவிட்டு, அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்தபடி தன்னருகே உட்கார வைத்தாள். இதற்காக அந்த இளைஞன் கோபப் படலாம் என்பதுபோல், பயந்து பார்த்தாள். அவனோ, அங்கே இல்லாமல் யாழ்.குடாவில் எங்கோ ஒரு இடத்தில் இருப்பவன் போல் இருந்தான்.

தமிழ்ச்செல்வி, அவனை அதிசயித்துப் பார்த்தாள். தன்னைத் தானே அடக்கிக் கொண்ட அவன் வல்லமையை தானும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பது போல், அவனை அண்ணாந்து பார்த்தாள். அவனைப் பார்க்கப் பார்க்க தனது சுமை குறைவது போலிருந்தது. இந்தச் சமயத்தில் சமையல் பகுதியில் இருந்து அண்ண்ாமலை வந்தான்.

"சாப்பிட வாம்மா... டேய், துரைக்கு வேற தனியாச் சொல்லனுமோ..? அடச்சி. எழுந்து வா."

தமிழ்ச்செல்விக்கு சாப்பிட மனமில்லை. ஆனால், அவள் சாப்பிடவில்லையானால், ரயில் பயலும் சாப்பிட மாட்டான். போதாக்குறைக்கு அந்தப் பயல் அவள் கையைப் பிடித்து இழுத்தான். வயிற்றுப் பசியை அடக்கவேண்டும் என்பதைவிட "அம்மாவோடு ஒன்றாக உட்கார்ந்து" ஒன்றாகச் சாப்பிடுவதில் அப்படியொரு ஆனந்தம் அவனுக்கு. அந்தப் பயல், இலங்கைப் பொடியனையும் தன்னோடு வரும்படி இழுத்தான். இதைப் பார்த்துவிட்டு தமிழ்ச்செல்வியும் "சாப்பிட வாரியாப்பா?" என்றாள். அவனோ, அண்ணனைப் பார்த்தான். அவன் பார்த்த பார்வையில் தமிழ் ச் செல்வி யை விட்டு வி ட் டு அ ண் ண ன ருகே போய் உட்கார்ந்தான். தமிழ்ச்செல்விக்கு என்னமோ போல் இருந்தது. அங்கிருக்கப் பிடிக்காமல் எழுந்து நடந்தாள்.

அந்த முழு ரயில் பெட்டியில், முக்கால் பகுதியை சமையல் வளாகம் வியாபித்து இருந்தது. ஒரு பக்கவாட்டில் குளிர்பான பாட்டில்கள். கண்கண்ணாய் இருந்த பெட்டிகளில் வைக்கப்

6.12。