பக்கம்:நிழல் முகங்கள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 சு. சமுத்திரம்

பட்டிருந்த சிகரெட், மிட்டாய், வேர்க்கடலை, வகையறாக்கள். அடுக்கடுக்காய் வைக்கப்பட்டிருந்தன. ஒரு பக்கம் மாவரைக்கும் கல்லுருளை. இன்னொரு பக்கம் தோசை போடும் செவ்வக இரும்புத்தட்டு.

இதற்கு வெளியே இருந்த பெஞ்சில் உட்கார்ந்தபடி, தமிழ் ச் செல்வி, அண்ணா மலை , ரயில் ப ய ல் ஆகியோர் சாப்பிட்டார்கள். தமிழ்ச்செல்வி ஒப்புக்குச் சாப்பிட்டுவிட்டு, அவர்கள் சாப்பிடுவது வரைக்கும் காத்திருந்தாள். ஏனோ, அவளால் வழக்கம்போல் சாப்பிட முடியவில்லை. அந்த இளைஞனையும், ஒத்தைக் கை பொடியனையும் நினைக்க நினைக்க, அவளுக்கு வயிறே இல்லாததுபோல் தோன்றியது.

தமிழ்ச்செல்வி எச்சித் தட்டுக்கள் கிடந்த குழாயடிப்பக்கம் போனாள். எதுக்கோ அடிக்கல் நட்டதுபோல் தோன்றிய அந்தக் குழாயைத் திறந்துவிட்டபடியே தட்டுக்களையும், பிளாஸ்டிக் தம்ளர்களையும் கழுவினாள். சமையல்காரர் குப்புசாமி, தோசைக் கார iரண்ணன், நான்கைந்து சர்வர்கள் தமிழ்ச்செல்வியை அனுதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருசிலர் அந்தப் பயலையும், அவனை விரட்டிக் கொண்டிருந்த அண்ணாமலை யையும் சிரிப்பும் கும்மாளமுமாய் பார்த்தார்கள்.

திடீரென்று, நான்குபேர் பின்பக்கமாகவும், மூன்றுபேர் முன்பக்கமாகவும் சமையல் வளாகத்திற்குள் வந்தார்கள். இவர்கள் போதாதென்று துப்பாக்கி சகிதமாக மூன்று ரயில்வே போலீஸாரும் உடன் வந்தார்கள். இந்த ரயில்வே சித்திர குப்தர்கள் இந்த மாதிரி எப்போதும் வந்ததில்லை. அதுவும் சயைமல் வளாகத்திற்குள். வந்தவர்கள் தமிழ்ச்செல்வியை மிடுக்கோடு பார்த்தார்கள். அந்தப் பார்வைக்கு மொழியாக்கம் செய்பவன்போல் காக்கி சட்டை போட்ட லஸ்கர் - அதாவது, பியூன் மாதிரியான எடுபிடியாள் - தமிழ்ச்செல்வியை பார்த்து, "ஏய்" என்றான். இதற்குள் தலைமை டிக்கெட் பரிசோதகர், அவளை நெருங்கி வந்து நின்றபடி கேட்டார்.

"ஏமண்டி. எங்கிருக்கே?"

"மெட்ராஸ்ல."

"டிக்கெட் இருக்குதா..?" "இல்ல ஸார்.” "எவ்வளவு நாளாய் இப்படி?”

"ஆறு மாதமாய் ஸார்."