பக்கம்:நிழல் முகங்கள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 சு. சமுத்திரம்

கதவு திறந்தது. பாதி திறந்தது. பலராமன் குழுவிற்கு பரிச்சயமான, அவர்களுடன் பாதி சிகரெட்டுக்களைப் பகிர்ந்து கொண்ட லஸ்கர் ராசமாணிக்கம் எஜமானத்தனமாக எகிறினான்.

'அ வங்க ரெஸ் ட் எ டுக் காங்க... ஏ ண் டா தொல் ைல கொடுக்கறே.?"

"இந்த சிஸ்டரைப் பற்றி உனக்கு நல்லாத் தெரியும். நீயே இவங்க கையால ஒசித் தோசை தின்னிருக்கே. அவங்ககிட்டே சொல்லி சிஸ்டரை விடச் சொல்லுடா."

"இப்போ அவங்க ரொம்ப பிஸி. அதோட இந்த விவகாரத்துல நான் தலையிடப்படாது."

சரி... எ ன் னை உள்ளே விடு.... நானே அவங் கிட்டே பேசிக்கிறேன்."

"டேய் உள்ளே வந்தே மரியாதை போயிடும்."

லஸ்கர், கதவை மூடப் போனான். நவாப்ஜான், திறக்கப் போனான். அந்தக் கதவு இருவரின் சக்திக்கு ஏற்ப அங்குமிங்கும் ஆடியது. இறுதியில் பலராமன், லஸ்கர் கையைப் பிடித்திழுத்து, அவனை வெளியே போட்டான். கோபமும், குமுறலுமாய் உள்ளே போனான். லஸ்கர் குரல் கொடுத்தான். பலராமன் பதில் கொடுத்தான்.

"டாய் நான் யார் தெரியுமாடா..?" "தெரியுண்டா கயிதே. பொதுமக்களோட செளகரியங்களைப் பார்க்க வேண்டிய வேலையாள். அதிகாரிங்க குடிச்சுட்டு வைக்கிற எச்சி விஸ்கியை குடிக்கிற ஆள்காட்டிப் பயல்’

பெண்கள் பிரிவில் இருந்த டிக்கெட் பரிசோதகர்கள், வெளியே வந்தார்கள். பலராமன் அவர்களைப் பார்த்து, சலுட் அடித்தான். அந்தப் பெருமையில் தலைமையதிகாரி அதட்டினார்.

"என்னய்யா. கலாட்டா. நீங்களும் உள்ளே போகனுமா?" நவாப்ஜான், நையாண்டித்தனமாகப் பேசினான். "ஸார். சட்டப்படி தப்பாய் இருக்கிற சில சமாச்சாரங்கள், தர்மப்படி சரியாய் இருக்கும். இந்த சிஸ்டர் டிக்கெட் வாங்காதது சட்டப்படி குற்றந்தான். அதே சமயம், இவங்க சமையலறைக்குள்ளே செய்கிற வேலையைப் பார்த்தால் நாமே காசு கொடுக்க வேண்டியது இருக்கும்."

"என்னய்யா உளறுறே.? சட்டம். சட்டம்தான்."