பக்கம்:நிழல் முகங்கள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 சு. சமுத்திரம்

"என்னங்க நீங்க? அவங்க சுயமரியாதைக்குப் பங்கம் வரும்படி நான் கொடுத்ததாய் சொல்லாதீங்கன்னு சொன்னேன். நீங்க இப்படிச் செய்திட்டீங்களே. உதவுறது தெரியாமல் உதவுறதுதான் மனிதாபிமானம் தொலைக்காட்சி சாட்சியாய் உதவுறது உதவப் பட்டவரை சிறுமைப்படுத்துவது மாதிரி..."

தமிழ்ச்செல்வி, அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். இவனின் 'இரும்பு உடம்பிற்குள் எவ்வளவு பெரிய மனிதாபிமானம்.

எல்லோருக்கும் தூக்கம் வந்தது. விளக்குகள் அணைக்கப் பட்டன. பேச்சுக்கள் கொட்டாவிகளாயின. குறட்டைகளாயின. நள்ளிரவு, திடீரென்று அந்த இளைஞன் எழுந்தான். பக்கவாட்டிற்கு வந்து, அப்புறம் மறைந்து போனான். கண்களை உருட்டியபடியே படுத்துக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வி, சிறிது புரளப் போனாள். கண்களை மூடப் போனாள். அங்குமிங்குமாய் புரண்டாள் அரைமணி நேரமாகியும் அவனைக் காணவில்லை.

தமிழ்ச்செல்வி, எழுந்தாள். அவன் நடந்த நடையிலேயே நடந்தாள்.

அந்த ரயில், மரங்களையும் மலைகளையும் விழுங்கியது போல், இருளாகிப்போன பகுதியில், தட்டுத் தடுமாறி முன்னெச்சரிக் கையோடு ஓடியது.

ஆகாயம் என்று ஒன்று இருப்பதாகவோ, அவற்றில் நட்சத்திரப் பிரகாசங்கள் ஜோதித் துண்டுகளாய் உள்ளன என்றோ நம்ப முடியாத இருள்மயம். ஆனாலும், அந்தப் பெட்டியின் பின் பகுதியில், கூண்டிலிட்டதுபோல் மேல்பரப்பில் மின்னிய மெல்லிய வெளிச்சம், மஞ்சள் கோடுகளாகச் சிதறி விழுந்தன.

தமிழ்ச்செல்வி, அந்த வெளிச்சத்திலும் இருளாகிப் போனது போல் நின்றாள்.

அந்த இளைஞன் ரயில் கதவருகே உள்ள மூலையில், சாய்ந்தபடி, இரண்டு கைகளையும் சேர்த்து, மார்பில் ஊன்றி, செங்குத்தாகச் சாய்த்து, தாமரைப் பூவின் ஒரு பகுதிபோல் விரிந்த உள்ளங்கையில் முகம் போட்டு நின்றான். ரயிலின் இழுப்புச் சத்தம்