பக்கம்:நிழல் முகங்கள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 187

மாதிரியான சத்தம். தொண்டைக்கும் வாய்க்கும் இடையே உயிர் துடிப்பது போன்ற அவலச் சத்தம் ஏங்கி ஏங்கி அழும் இயலாமைச் சத்தம்.

தமிழ்ச்செல்விக்கே, அழுகை வந்தது. எல்லாக் குழந்தைகளும், பூமியில் விழுந்தவுடன் அழுவதுபோல், இவன் அழுதிருக்க மாட்டான் என்று தனது மனதுக்குள் அனுமானித்த அவன், இப்போது அப்படி அழுவதைப் பார்த்து அவலப்பட்டாள். இரும்புக் கவசமான அந்த உடம்பிற்குள் பூப்போலான இதயத்தை, ஏதோ ஒரு சமூகப்புயல் பிய்த்துவிட்டதை உணர்ந்தாள். தன்னை யறியாமலே அழப் போனாள். பிறகு, தன்னையடக்கி மெள்ள நடந்து, அவன் முன்னால் போய்நின்றர்ள். அவன் கைகளை அகற்றி, முகத்தை நிமிர்த்தப் போனவள், சிறிது யோசித்து, கரங்களை இழுத்துக்கொண்டாள். அவனோ, இப்போது உடல் குலுங்க விம்மினான். உயிர் குலுங்க ஏங்கினான். அவனை எப்படிக் கூப்பிடுவது என்று தமிழ்செல்விக்குப் புரியவில்லை. பிறகு, அவன் தலைக்கு மேல், வலது கரத்தைக் கொண்டு போய், அந்த ரயில் பெட்டியில் தட்டினாள்.

அவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அந்த வேகத்தில், அவள் கை, அவன் தோள் மேல் விழுந்தது. அவன் தன்னையறியாமலே, அந்தக் கையை பிடிக்கப் போனபோது, அந்தக் கரம், அதற்கு உரியவளிடம் மடங்கிப்போனது. அவன், தமிழ்செல்வியைக் கூச்சத்தோடு பார்த்தான். பிறகு, அவசர அவசரமாக முகத்தைக் குனிந்து, தோள் சட்டையில் அங்குமிங்குமாய் துடைத்துக் கொண்டான். பிறகு, எதுவும் நடக்காததுபோல் அவளிடம் இயல்பாகக் கேட்டான்.

"எவராவது பார்த்தால் தப்பா நினைக்கலாம், போங்கள்."

"எனக்கு அப்படிப்பட்ட தப்பான எண்ணம் வரல. அதனால தப்பாயும் நினைப்பாங்கன்னு தோணல."

"அய்யய்யோ. நான் அந்த அர்த்தத்தில் சொல்லல." "நீங்க எந்த அர்த்தத்தில் சொன்னாலும் நான் போகப் போவதாய் இல்லை. இதோ பாருங்க ஸார்."

"கமலாகரன்னு கதைக்கலாம்." "நான் சொல்றதை தயவு செய்து கேளுங்க கமலாகரன்! மகிழ்ச்சியைப் பகிரப் பகிர அது கூடும். துக்கத்தை பிறருடன் பகிரப் பகிர அது குறையும். உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், யூகிக்க முடிகிறது. உங்கள் துயரத்தை என்கிட்டேதான் சொல்லணுமுன்னு தேவையில்ல. யாராவது ஒருத்தர்கிட்டே