பக்கம்:நிழல் முகங்கள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 189

வைத்தது. ரயில் பெட்டியில் சாயாமல், நிமிர்ந்து நின்று, ஆதாரத்திற்காக ரயில் கதவைப் பிடித்தபடி தன்னுடைய கதையைச் சொல்லத் துவங்கினான்.

"நான், யாழ் பல்கலைக் கழகத்துல அரசியலில் பட்டப்படிப்பு படித்தவன். அதே நகருக்கு பத்து மைல் வடக்கேயுள்ள சாவகச்சேரியில், தந்தையுடனும், தாயோடும், தங்கையோடும், தம்பியோடும் வாழ்ந்தவன். சிங்களக்காடையர்கள், யாழ் நகரிலும், இதர இடங்களிலும் சும்மா நின்ற தமிழர்களை இம்சித்தபோதே, அவர்களைப் பழி வாங்கத் துடித்தவன். யாழில் கல்லூரி மாணவிகள் சிங்கள ராணுவத்தால், பலாலி முகாமிற்கு கடத்தப் பட்டபோது, பதிமூன்று சிங்கள சிப்பாய்களை எல்டிடிஇ இயக்கம் வெடி வைத்து தகர்ப்பதில் ஈடுபட்டவர்களில், நானும் ஒருவன். அப்போது நான் ஆடிய ஊழிக்கூத்தில் இப்போதுகூட உடம்பு ஆடும்."

"காரணம், என் ஒரே தங்கை, எனக்குத் தங்கையாக இல்லாமல் தாயாகிப்போன விமலகுமாரி, சிங்களக் காடையர் களால் கற்பழிக்கப்பட்டு காட்டிலே வீசப்பட்டாள். உடம்பில் இருந்த கொஞ்சு நஞ்ச உயிரையும் அவள் போக்கிக் கொண்டாள். இதனால் அம்மா - சர்வசாதுவான என் தாய், நான் போராளியாக மாறியாக வேண்டும் என்பதில் என்னுடன் உடன்பட்டாள். நானும் சிங்கள ராணுவத்தை யாழ் கோட்டையில் இருந்து வெளியே வரவிடாமல் தடுத்த முன்னணி வீரர்களில் ஒருவனாக இருந்தேன். கண்ணி வெடிகள் செய்யவும் தெரியும், வைக்கவும் தெரியும். ஏறி குண்டுகளை எடுக்கவும் தெரியும். எறியவும் தெரியவும். இதற்காக பயிற்சி பெற்றேன்."

"என் தாயின் போக்கும் அடியோடு மாறிவிட்டது. கண் முன்னாலேயே கதறக் கதற கடத்திச் செல்லப்பட்ட அருமை மகளின் அந்திமத்திற்குப் பிறகு அந்த வீட்டுப் பூனை வேங்கை ஆகியது. எங்களுக்கு மூதாதையர் சொத்து இருந்தது. தந்தை சம்பாதித்த பணம் இருந்தது. என் தாய் போராளிகளுக்குச் சமைத்துப் போட்டாள். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி என்றும், இட்லி, சோறு என்றும் ஆக்கிப்போட்டாள். போராளிகள் வேன்களில் வந்து என் அம்மா பொட்டலம் பொட்டலமாகக் கொடுப்பதை எடுத்துக்கொண்டு போவார்கள். போராளித் தலைவர்களில் சிலர், எங்கள் வீட்டில் அம்மா கையால் சாப்பிடுவார்கள்."

"அவர்களுக்கு உணவூட்டியபடியே என் தாய், "நீ இன்றைக்கு எத்தனை காடையரை கொன்றாய்" என்று ஒவ்வொருவரையும்