பக்கம்:நிழல் முகங்கள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 சு. சமுத்திரம்

கேட்பாள். எந்த பொடியனாவது, கொல்ல வில்லை என்று சொன்னால் "உனக்கு சாப்பாடு கிடையாது” என்று செல்லமாகவும் கோபிப்பாள். கண்டிப்பாகவும் பேசுவாள். அதே சமயம், நமது பெண்களுக்கு வந்தது, சிங்களப் பெண்களுக்கு வரக்கூடாது என்றும் வாதாடுவாள். தவறு பேசுவாள். போராளிகள் அப்படி நடந்து கொண்டால்தானே அவள் வாதாடுவதாய் அர்த்தம்? அகத்தில் புத்தனாய், புறத்தில் யுத்தனாய் மாறிய பொடியன்களின் போர்ப்பண்பை வரலாறு சொல்லத்தான் போகிறது."

“எங்கள் வீட்டு நடவடிக்கைகளை தெரிந்து கொண்ட ராணுவத்தினர், பொடியன்கள் போர்க்களம் போன சமயத்தில் பேடிகளாய் வந்து, என் தாயை உதைத்துப் போட்டார்கள். என் அம்மாவின் முதுகிலே, சூடான் இஸ்திரிப் பெட்டியை வைத்து இழுத்திருக்கிறார்கள். என்தாய் முதுகிலே தோலுரிந்து கிடந்த சேதி யாழில் இருந்த எனக்கு வந்தது. உடனே ஒரு சில போராளிகளோடு சாவகச்சேரி நோக்கிப் புறப்பட்டோம். இதை எதிர்பார்த்த ராணுவக் காடையர்கள், வழியில் எங்களை மறைந்திருந்து பிடித்தார்கள். பூட்ஸ் கால்களால் எட்டி உதைத்தார்கள். வித்தியாசமான பொடியன்களான எங்களுக்கு சாக்லேட்டும் சயனைடும் ஒன்று. கழுத்தில் தொங்கிய சயனைமீடு, என் கைபடும் முன்னால், சிங்கள துப்பாக்கி முனைக்கத்தி அதைக் கிழித்தெறிகிறது. நாங்கள் பூசா முகாமிற்கு கொண்டு போகப்பட்டோம். அப்பப்பா. அங்கே நாங்கள் பட்டபாட்டை நினைத்தால் இப்போதுகூட வலிக்கும்."

"இலங்கையின் தென்கோடியில் உள்ள இந்த முகாமில், ஒரு கொட்டடியில் எங்களைப் பூட்டி வைத்தார்கள். கைவிலங்கு, கால் விலங்கு, இவை போதாது என்று பிளாஸ்டிக் குழாயில் மணல் களைத் திணித்து, கால்களிலே அடிப்பார்கள். கால்களின்மேலே லத்திக் கம்புகளை பக்கவாட்டில் வைத்துவிட்டு, இருபுறமும் காடையர் இருவர் உட்காருவார்கள். இந்த மாதிரியான பயங்கரத் தண்டனையிலும் நாங்கள் கெஞ்சாமல் இருந்தோம். இதில் அதிகப்படியாக இருந்தவன் நான்போலும். ஆகையால் என்னை தலைகீழாகத் தொங்கப்போட்டார்கள் கைகளிரண்டும் பின்புறமாய் வழித்துக் கட்டுப்பட்டு அந்தரத்தில் தொங்கினேன். இரண்டு பெருவிரல்களையும் சங்கிலியில் கட்டி தலை கீழாகத் தொங்கப் போட்டு, அங்குமிங்கு மாக ஆடிய தலையைத் தூக்கி, முடியைப் பிடித்து இழுத்தார்கள். தமிழ்ப் போராளிகளின் தாக்குதல்களில் சிங்கள ராணுவத்தின் மரண எண்ணிக்கை, அதிகரிக்கும் நாட்களில், எங்களைப் பெருவிரலில் கட்டி, கம்புகளோடு சிப்பாய்களும் கால்மேல் ஏறுவார்கள்."