பக்கம்:நிழல் முகங்கள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 சு. சமுத்திரம்

"இதற்குள் என்னிடம் வந்த இந்திய சிப்பாய்கள் இந்தியில் ஏதோ கத்தினார்கள். என் சட்டைப் யைபை குடைந்தார்கள். அதற்குள் இருந்த அடையாள கார்டை பார்த்தார்கள். பழைய கைதியான என் கார்டைப் பார்த்துவிட்டு, அதை மீண்டும் என்னிடமே கொடுத்துவிட்டு முறைத்தார்கள். பிறகு, ஜாவ். ஜாவ். என்றார்கள். எனக்கு, அவர்களின் இந்தி புரியவில்லையானாலும், அவர்கள் சொல்லப்போவது நினைவுக்கு வந்தது. நான் பூசா கைதி என்ற முறையில், இந்தியப் படை ஏற்பாடு செய்யும் மறுவாழ்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறவன். அங்கே குண்டைத் தூக்கிப் போடுவேனோ, குழிபறிப்பேனோ என்று அந்த சிப்பாய்கள் இருவரும் என்னை தங்களோடு நடக்கச் சொன்னார்கள். இதை எனது போராளிப் பையன்கள் அனல் பறக்கப் பார்த்தார்கள். அவர் களைப் பற்றிப் பேசிக்கொண்டு போகிறேன் என்று அனுமானிக்கும் பார்வை."

"இந்த அநியாய வேதனை யாருக்காவது ஏற்பட்டிருக்குமா தமிழ்ச்செல்வி: போராளிகளுக்கு நான் ஐந்தாம் படை இந்திய ராணுவத்திற்கோ எட்டப்பன். அவர்களே என்னைச் சந்தேகக் குழியில் தள்ளிவிட்டு. சந்தேகமாகப் பார்த்தார்கள். இரண்டு சிப்பாய்களும் அங்கிருந்த ராணுவ முகாமிற்குக் கூட்டிப் போனார்கள். ராணுவ அதிகாரி என்னிடம் ஆங்கிலத்தில் மிரட்டல் தொனியில் வேண்டுகோளாய் சொன்னார். ராணுவத்தினருடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்த நான், நம்பிக்கைக்கு உரியவனாக இல்லையானால் நடப்பது வேறு என்றார். பொடியன்களைப் பற்றிய புள்ளி விவரம் தேவையில்லை என்றாலும், அவர்களோடு உறவாடினால் அதோ கதிதான் என்றார்."

"நான் அசந்து போனேன். அதிர்ந்து போகவில்லை. பூசா முகாமில் படாத வேதனையா? சித்ரவதையா? நானும் ஒரு போராளி. எந்த முடிவு எடுத்தாலும், அச்சத்தின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. எந்த முடிவெடுத்தாலும், சுயமாகவே முடிவெடுக்க வேண்டும்."

"போராளிகள் என்னை குற்றவாளிபோல் கருதுவதை பெரிதாக எடுத்துக் கொண்டு, அந்த அடிப்படையில் முடிவெடுக்கக்கூடாது. ஒவ்வொரு போராளியைப் பற்றியும் விவரம் அறிந்தவன், நாட்டு யானையை வைத்து, காட்டு யானையைப் பிடிப்பதுபோல், இந்திய ராணுவம் என்னை வைத்து, தங்களைப் பிடித்து விடுவார்களோ என்று அவர்கள் நினைப்பது நியாயமே. ஒரு போரில் சொந்த நண்பனையும் கொல்வது தவிர்க்க முடியாதது என்று தங்களுக்குத் தாங்களே ஒரு சமாதானத்தைச் சொல்லிக் கொண்டு, அந்த சமாதானத்தின்மீது ஏறி நின்று போர் தொடுக்கிறார்கள்.