பக்கம்:நிழல் முகங்கள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 195

அகத்தையும் புறமாக்கி விட்டார்கள். இவர்கள் என்மீது கொண்டுள்ள சந்தேகம் அநியாயமானது என்றாலும், ஒருவகையில் தவிர்க்க முடியாதது. இதேபோல் போராளிகளோடு தொடர்பு வைத்திருப்பதுபோல் தோன்றும் என்னை கண்காணிப்பதும் இந்திய ராணுவத்தால் தவிர்க்க முடியாதது."

"இந்தப் பின்னணியில் நான் பயமின்றி யோசித்தேன். 'காட்டுக்குள் போகலாமா...? போராளிகளின் போக்கை எதிர்க்கலாமா...' எம்மக்களில் பலர். துரோகிகள் என்று போராளிகளால் கொல்லப்படுகிறார்கள். போராளி அமைப்புக் களுக்கிடையே நிலவும் பாரதப் போர், எம்மக்களின் ரத்தத்தைக் குடிக்கிறது. ஒரு பொடியன் கீழே குனியும்போது ராணுவத்தால் சுடப்படுகிறான். அல்லது ராணுவத்தில் செல்லும் இந்தியப் படைகள் கண்ணிவெடியில் சிதறு தேங்காயாய் சிதறிச் சாகிறார்கள். இதனால், இன்னொரு பொடியன் கீழே ஒரு பனங்காயை எடுத்தால்கூட அது குண்டாக இருக்கலாம் என்று சுடப்படுகிறான். அப்படி அவன் சுடப்பட வில்லையானால், ஒருவேளை, அவனால் பத்துப் பதினைந்து ராணுவ வீரர்கள் உயிரிழப்பார்கள். ஆக, இப்போது இலங்கைத் தமிழர் பகுதியை இந்திய ராணுவம் ஆளவில்லை; எல்.டி.டி.இ. ஆளவில்லை; ஈ.பி.ஆர்.எல்.எப். ஆளவில்லை; எமனே ஆள்கிறான். எம்மக்களுக்கு அழுதழுது கண்ணிர் தீர்ந்தது. புலம்பிப் புலம்பி வாய் செத்தது. வன்முறைகளைப் பார்த்துப் பார்த்து கண் இருளானது."

"நான், யோசித்துப் பார்த்தேன். முதல் தடவையாக, கிழக்குப் பகுதியில், தமிழ் உச்சரிப்பில் மாறுபட்ட தமிழர்களையும், தமிழர்களாக தங்களைக் கருதிக் கொள்ளாத தமிழ் முஸ்லீம் களையும், சிங்களவர் களையும் சிறுபான்மையாக உள்ளடக்கிய தமிழ் மாநிலம் பிறந்து விட்டது. தமிழர்களே காவல்துறையினராக, பயிற்சி நடைபெறுகிறது. தமிழ் ஆட்சிமொழியாக அங்கீகரிக்கப் பட்டாகிவிட்டது. இதற்கு மேலும், போரைத் தொடரும் போராளிகளின் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. மாறுபட்டவர் களை துரோகிகளாகக் கருதி, சொந்தச் சோதரர்களைக் கொல்வதை அராஜகமாக நினைத்தேன். அதேசமயம் நீங்கள், அங்கே சொன்னது போல், போராளிகளை எதிர்த்து, துரோகிப் பட்டம் வாங்கிக் கொள்ளவும் மனம் ஏற்கவில்லை."

"இப்படிப்பட்ட சிந்தனைகளோடு யாழ் நகர் போனேன். வழியில் மருத்துவ மனைக்குப் போனேன். என் தந்தையின் உடல் முழுவதும் துணி மூடப்பட்டிருந்தது. சாவகச்சேரியில் துணிக்கடை நடத்தி, தரமான பொருளுக்கும், இதமான போக்கிற்கும். நற்பெயர் வாங்கிய என் தந்தையின் சடலத்தை பார்த்தபடியே நானே ஒரு