பக்கம்:நிழல் முகங்கள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 சு. சமுத்திரம்

சடலம்போல நின்றேன். அதே சமயம், என் உள்ளம் மரத்துப் போனதாலோ என்னவோ அழுகை வரவில்லை. ஏதோ ஒரு விதமான பேய்ச்சிரிப்பு வந்தது. சிங்கள ஊழிக்கூத்தால் சுடலைப் பூமியான என் மண்ணில் இயற்கைக்கு விரோதமாக ஏற்படும் எத்தனையோ மரணங்களில் இதுவும் ஒன்று என்பதுபோன்ற உணர்வு. தந்தை வழியாக, தமிழ்க்குலத்தின் மரணத்திற்கு மருகினேன். தமிழ் இனத்தின் வழியாக, தந்தையின் சாவிற்கு தவித்தேன்."

"இதற்கு மேலும், யாழில் இருக்கப் பிடிக்கவில்லை. நான் படித்த கல்லூரியே இப்போது எமபுரிபோல் தோன்றியது. பிறந்த மண்ணே இறந்தது போன்ற உணர்வு. இருதரப்பிற்கும் சந்தேகமானேன். ஆகையால், என் தம்பியைக் கூட்டிக் கொண்டு இந்தியா வந்தேன். மொட்டைக் கையான தம்பிக்கு செயற்கைக் கை பொருத்த வேண்டும் என்று இந்தியப் படையினரிடம் கேட்டேன். அவர்களே, இங்கே என்னை ஆயிரம் கேள்விகளுக்குப் பிறகு அனுப்பி வைத்தார்கள். ஆனால், இங்கே வந்தாலோ, அங்கேயே இருந்திருக்கலாம் என்பதுபோல் தோன்றுகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக கோபாவேசமாய் நின்ற தாய்த் தமிழர்களும், புலி களின் குகையாய் விளங்கிய தமிழகமும், இப்போது, இலங்கைத் தமிழன் என்றதும் ஏளனத்துடனும், எரிச்சலோடும் பார்க்கிறார்கள்."

"எந்த இடத்திலும், நாட்டிலும் இருக்கக் கூடியவர்கள்போல், எங்களில் ஒருசிலர் நடத்திய திருட்டையும், அத்துமீறல்களையும் பத்திரிகைகள் மிகைப்படுத்தியதாலும், தமிழகத்திலும், இலங்கைத் தமிழர்களின் துப்பாக்கிக் கலாச்சாரம் வந்து விடும் என்ற பயத்தாலும், தாய்த் தமிழர்கள் எங்களை அந்நியத் தன்மையோடு பார்க்கிறார்கள். தம்பியுடன் தங்குவதற்காக வாடகைக்கு வீடு கேட்டு, சென்னை நகரமெங்கும் சல்லடை போட்டேன். வாடகைக்கு விடப்படும் என்று பலகை தொங்கவிட்டவர்கள்கூட இலங்கைத் தமிழன் என்று தெ. நததும், வீட்டை விட்டு விட்டதாக என்னைக் கைவிட்டு விட்டார்கள்."

"என்றாலும், தாய் தாய் தான் என்பதுபோல், நம் மூதாதையர் பிறந்த இந்திய மண்ணிலும் இன்னும் நம்மவர்கள் என்று சொல்லும் படியானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். எனக்கு ஒருத்தர் இடம் கொடுத்தார். கோபம் என்பதையே உணர்ந்தறியாத நல்ல மனிதர். பெங்களுரில் வசிப்பவர். தமிழர் பேரவை என்று ஒரு சமூக அமைப்பை வைத்திருக்கும் சண்முகசுந்தரம் என்பவர். அவரிடம் கோபம் என்பதை பார்க்கவே முடியாது. ஒரே ஒரு தடவை நான் வாடகை கொடுக்கப்போன போதுதான் கோபப் பட்டார். அடிக்க வருபவர்போல் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். சரி. என் கதை