பக்கம்:நிழல் முகங்கள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 197

முடிந்தது - எல்லா வகையிலும். உங்கள் கதையை நீங்கள் விருப்பப்பட்டால் சொல்லலாம்."

தமிழ்ச்செல்வி, அவனைக் குழந்தையைப் பார்ப்பதுபோல் பார்த்தாள். அத்தனை இடிகளையும் வாங்கிக் கொண்டு, வெளியே கம்பீரமாகவும், அதே சமயம் உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கும் அவனிடத்தில், அவள் மனம் போய் விழுந்தது. எந்தப் பொருத்தம் இருக்கிறதோ இல்லையோ துக்கப் பொருத்தம். அவனிடம் ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அவனருகே மேலும் நெருங்கியபடியே சொன்னாள்.

"உங்கள் கதை நாவல் என்றால் என் கதை சிறுகதை. உங்கள் கதையை. உள்வாங்கி துக்கப்படும் என்னால் இப்போது, என் கதையைச் சொல்ல முடியாது. நாளை சொல்லுகிறேன்."

"ஓங்ககிட்டே நடந்ததைச் சொன்ன பிறகு, மனம் லேசானது மாதிரி தோணுது."

"இந்த மனம் ரொம்ப பொல்லாதது கமலாகரன். இப்போ லேசானது மாதிரி தெரியும். அப்புறம் வட்டியும் முதலுமாய் கனமாய் வரும். இதை நானே அனுபவிக்கிறேன். அதனால் உங்க கஷ்டங்களையும் நஷ்டங்களையும் நம்பிக்கையானவர்களோடு பகிர்ந்து கொள்ளவும்."

"நம்பிக்கையானாவர்கள்னு யாருமே இல்லையே..?"

"அப்போ என்னை நம்பிக்கையானவள் என்று நீங்க நினைக்கலே.?"

“நினைக்காட்டால் பேசுவேனோ..? உங்கள் நட்பு ரயில் நட்புதானே.”

தமிழ்ச்செல்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரிய வில்லை. அவனுக்கு எப்படியாவது பதிலளிக்க வேண்டும் என்று நினைத்தாள். எந்த வார்த்தையும் கிட்ைக்கவில்லை. இறுதியாக, “காலையில் பேசிக் கொள்ளலாம். எந்தப் பிரச்சினையையும், நண்பர்கள் தீர்த்து வைப்பதை விட , நாள்-அதாவது காலம், நன்றாக தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையோடு துங்குங்க" என்றாள்.

தமிழ்ச்செல்வி புறப்பட்டாள். கமலாகரனும், அவளோடு நடக்கப்ப்ோனான். உடனே அவள், அவனை ஒரம் சாய்த்துப் பார்த்தபோது, அவன் புரிந்துகொண்டு, அங்கே நின்றான் தமிழ்ச்செல்வி, பெட்டிக்குள் வந்தாள். எவரும் விழித்திருக்கவில்லை.

தாலாட்டுச் சத்தம் தாறுமாறு சத்தமாக, ஆடிய தொட்டில், அப்படியே நின்றால், குழந்தைகள் எப்படி கண்விழித்து எழுமோ,

●.14