பக்கம்:நிழல் முகங்கள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 சு. சமுத்திரம்

அப்படி இருவரும் எழுந்தார்கள். ஒருவரை ஒருவர் சுகமாகப் பார்த்துக் கொண்டார்கள். நவாப்ஜான், "ஒனக்கு காபி வாங்கிட்டு வரட்டுமா..? டிபன் வாங்கிட்டு வரட்டுமா செல்வி என்றான். "காபி' என்று சொல்லப்போன தமிழ்ச்செல்வி, "வெளியில் போய் காலார நடந்து ஒரு காபி குடித்துட்டு வாறேன்' என்று தயக்கத்தோடு சொன்னபடியே, கூச்சத்தோடு எழுத்து, வெட்கத்தோடு நடந்தாள். வெளியே வந்தவள், திரும்பிப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போல், கமலாகரன் வந்தான்.

அவளை நெருங்கி வந்து நின்று, அவளிடப் நிதலை கேட்டான், அவன். பதறிப் போனவள் போல், அய்யய்யோ. அதெல்லாம் முடியாது." என்றான். உடனே, அவன் அவளைவிட்டு வேறு பக்கமாக நடந்தான்.

لاتلاقي

அந்த ரயில் புறப்படப்போனதோ இல்லையோ, அது புறப்படும் நேரம் நெருங்கி விட்டதாக பலர் நெருக்கியடித்தார்கள்.

சில்லறை வியாபாரிகள், பயணிகளிடம் அவசர அவசரமாக காசுகளைப் பறித்தார்கள். பயணிகளிடம் தாங்கள் கொடுத்த ரூபாய் நோட்டுக்களை அவசரமாகவும், அனாவசியமாகவும் வாங்கிக் கொண்ட நடமாடும் கடைக்காரர்கள் மீதிப் பணத்தைக் கொடுக்கும்போது, ஏதோ தன் அப்பன் வீட்டுச் சொத்தில் இருந்து எடுத்துக் கொடுப்பதுபோல் தயங்கினார்கள். பயணிகளோ, ரயிலை ஒரு கண்ணாலும், தயக்கர்களை இன்னொரு கண்ணாலும் மாறி மாறிப் பார்த்தார்கள். சிலர், தாய்மொழியில், தங்களை அறியாமலே வசை பாடினார்கள். இந்தச் சமயத்தல், தண்ணிர் வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்த பையன், வழிகேட்டு மணியடித்தான். இதனை ரயில் மணி என்று நினைத்து, பிளாட்பாரக்காரர்கள் பயணிகளானார்கள். ரயிலுக்குள் குசலம் விசாரித்தவர்கள், பிளாட்பார வாசிகளானார்கள். அவர்கள் பிணைப்புக்கள் அறுபட்டு, பிரிவுகளாக சிதறப் போனபோது

தமிழ்ச்செல்வி, தன்னை விட்டு நகர்ந்து, தன் பாட்டுக்கு நடந்து போன கமலாகரனையே வெறித்துப் பார்த்தாள். அவன் முதுகு, எப்படி அவள் கண்களை வெளியே பார்க்க முடியாமல் மறைத்து,