பக்கம்:நிழல் முகங்கள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 190

தன்னை மட்டும் பார்க்க வைத்ததோ, அப்படி அவளும், அந்தக் கனத்தில் அவனை மட்டுமே நினைத்தாள். அவன் ஒருத்தி இருப்பதாக நினைவின்றியே, அவள், அவனாகி விட்டான்.

'உலகில், அன்பைத் தவிர பெரிதாக என்ன இருக்கிறது? அழியக்கூடிய உடம்பில் அழியாதது ஆன்மா என்கிறார்கள். அத்த ஆன்மா என்பது அன்பத்ை தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்? அவரருகே இருக்கும்போது எனக்கும், என்னால் அவருக்கும் ஏதோ ஒரு நிர்மலமான மகிழ்ச்சியென்றோ, துயரமென்றோ, சொல்லில் விளக்க முடியாத உணர்விற்கும் அப்பாற்பட்ட அல்லது இந்த இரண்டும் ஒன்றறக் கலந்து ஏற்பட்ட ரசாயனச் சேர்க்கையில் உருவான ஒரு உணர்விற்கு - ஒரு ஸ்தூல உணர்விற்கு ஈடாக எது இருக்க முடியும்?

'அப்படி என்ன பெரிதாகக் கேட்டுவிட்டார். கையிழந்த தம்பிக்கு, செய்ப்பூர் செயற்கைக் கை பொருத்த வேண்டுமாம். அதைப் பொருத்துவதற்கு பயிற்சி அது இது என்று இருபது நாள் ஆகுமாம். இந்த இருபது நாளும், என்னையும் தன்னோடு வரச் சொன்னார். தாதியாக அல்ல; காதலியாக அல்ல; தோழியாக. துணையாக... வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவளுக்கு, தன்னம்பிக்கையாக அவர் கூட்டதில் தப்பில்லை. அப்படி அவர் கூப்பிட்டதே ஒரு பெரிய பாக்கியம், வாழ்க்கையில் எத்தனையோ எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாக, நண்பர்களே பகைவர்களான வாழ்க்கை என்பதே விஷ நின்ைவாக, விஷப் பயணமாக போனவருக்கு, நான் உறுதுணையாக இருப்பது ஒரு சேவைதான். இதில் தப்பில்லை.

தமிழ்ச்செல்வி, தாவியோடப் போனாள். அவன் முன்னால் போய் நின்று, ஒங்களுக்கு நான். எனக்கு நீங்கள்" என்று கூடச் சொல்ல நினைத்தாள். ஆனாலும், அவள் பாசச் சக்கரம் இப்போது கமலாகரனை கீழே அழுத்தி, பலராமன், நவாப்ஜான் தோழர் களையும், ரயில் பயலையும் தூக்கிக் காட்டியது. இவர்களை விட்டுஇந்த அன்புப் பிரவாகத்தை விட்டு எப்படிப் பிரிய முடியும்? இந்த ரயில் வாழ்க்கை, நிச வாழ்க்கையைவிட கோடி பெறும். இந்த ரயில் தோழர்கள் என் உயிர்த் தோழர்கள். உயிரை விட்ட உடம்பால் நடமாட முடியுமா? எனக்கோ எண்ணமே உடம்பே; அதன் உயிரான உணர்வுகள் இந்த பலராமன் அண்ணன், இந்த நவாப்ஜான் தோழன்; இந்த அண்ணாமலை அண்ணாச்சி, இந்த ரயில்பயல் மகன். இந்த பாசத்தோப்பிலே நான் ஒரு மரம். இதைவிட்டுப் போனால் மரத்துப் போனவள் ஒருத்தி மறித்துப் போனாலும் பரவாயில்லை; மரத்துப் போகலாமா..?