பக்கம்:நிழல் முகங்கள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 சு. சமுத்திரம்

"கூடாது. கூடாது." என்று சொன்னபடியே, தமிழ்ச்செல்வி, கமலாகரன்மேல் விட்ட கண்களை வலுக்கட்டாயமாக விட்டு விட்டு, ரயில் பெட்டியை நோக்கி நடந்தாள். கமலாகரனைப் பார்த்து, தன் நிலையை விளக்கிச் சொல்லலாமே என்று திரும்பி நடக்கப்போனாள். கால்களுக்கு மனம் நங்கூரம் பாய்ச்சியது. தோற்றுவிடுவோம் என்ற பயமோ, ரயில் தோழர்களை இழந்து விடுவோம் என்ற எண்ணமோ.

தமிழ்ச்செல்வி, தன் கையில் நண்டு ஊறுவது மாதிரியாக உணர்ந்து நகர்ந்தாள். ரயில் பயல், அவள் இடது கையைப் பற்றிக் கொண்டான். அவளை, அந்த சிறு இடைவேளைவரை சந்திக்காமல் இருப்பதால் தாக்குண்டவன்போல், அவள் கரத்தை இறுகப் பற்றிய படியே, "அம். அம்." என்றான். அவளோ, அந்தப் பயலையும், தொலைவில் தெரிந்த கமலாகரனையும் மாறி மாறிப் பார்த்தாள். அவளின் மனோதராசில் இருந்த இந்த இருவர் அமர்ந்த தட்டுக்கள் சமப்பட்டன. பின்னர் உயர்ந்தும் தாழ்ந்தும், மாறிமாறி ஆடின.

தமிழ்ச்செல்வி, ரயில் பயலை கிட்டத்தட்ட தூக்கியபடியே ரயில் பெட்டிக்குள் வந்தாள். இருவரும், நவாப்ஜானுக்கும், பலராமனுக்கும் இடையே உட்கார்ந்தார்கள். அவள், அந்தப் பயலின் தலையைக் கோதிவிட்டபடியே, ரயில் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தாள். அந்தப் பயலோ, அந்த ஸ்பரிசத்தில் அங்கே இல்லாததுபோல் எங்கேயோ இருந்தான். அந்த ரயில் பெட்டிக்குள் நடந்த நடமாட்டங்களைத் தாண்டி, அந்த ரயிலுக்கும், அப்பாற்பட்டு, கண்ணுக்குத் தெரியாத ஒர் களத்தில், சொல்ல முடியாத ஒரு சுகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

இதற்குள் ரயில் வேகமாக, முன்னெச்சரிக்கை கொடுக்காமலே ஒட்டம் பிடித்தது. எங்கேயோ பராக்குப் பார்த்துக் கொண்டு நடந்த கமலாகரனை, உள்ளே இருந்தபடியே தமிழ்ச்செல்வி, "ஒங்களைத்தான். சீக்கிரம். சீக்கிரம்." என்று உசுப்பினாள். அவள் குரலைக் கேட்ட பிறகுதான் எத்தனையோ குரல்களுக்கிடையே, அந்த அபயக்குரல் காட்டிய அபாயத்தை உணர்ந்து, கமலாகரன் ரயில் பெட்டியின் இரும்புப் பிடிப்பை பிடித்து, துள்ளிக்குதித்து உள்ளே வந்தான். வந்த வேகத்தில் ரயிலோட்டத்தில் கீழே விழப் போனான். எல்லோரும் பதறி எழுந்தபோது, கிட்டத்தட்ட கீழே விழப் போனவனை, அவன் தம்பி - அந்த பன்னிரண்டு வயதுச் சிறுவன் தன் இரு கரங்களால் தாங்கிக் கொண்டான். முழுமையான ஒரு கையையும், முழங்கைக்கு மேல் இல்லாமல் போன மொக்கைக் கையையும் இணையாக வைத்து, அண்ணனை விழாதபடி பார்த்துக் கொண்டான். நவாப்ஜான், "பாரு சாரே. இதுக்குத்தான் தான்