பக்கம்:நிழல் முகங்கள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 201

ஆடாட்டியும் சதையாடும்" என்கிறது. நாங்களும் ஒன்னை பிடிக்க வந்தோம். ஆனால், தம்பிதான் ஒன்னைத் தாங்கிக்கொண்டான். பார்த்து வரப்படாது. "நம்மோட நடமாட்டம் எப்போதும் இன்னொன்னோடேயே இணைஞ்சிருக்கும் என்பதை மறந்துடப் படாது ஸாரே" என்றான்.

கமலாகரன், அப்போது தமிழ்ச்செல்வியை ஆழமாகப் பார்த்தான். அவளோ, ரயில் பயலின் தலையை யதேச்சையாகத் தடவியபடியே கையிழந்த அந்தச் சிறுவனைப் பார்த்தாள். இலங்கைத் தமிழர் பாரதப் போரில் அரவானாக்கப்பட்ட அந்த முனையிழந்த முருங்கப் பிஞ்சை உற்றுப் பார்த்தாள். உறவே உதாசினமாகும் இந்தக் காலத்தில், அந்தத் தம்பியை ஏதோ ஒரு அகதிகள் முகாமில் சேர்க்காமல், அவனுக்காகவே வாழ்வது போல், தம்பி சிரிக்கும்போது சிரித்தும், கழிக்கும்போது சுழித்தும், அவன் முகத்தை கைக்குட்டையால் துடைத்து விட்டும், தலைமுடியை ஒதுக்கி விட்டும் சுகம் கண்ட அந்த அண்ணனைப் பார்த்து வியந்தாள். அந்தச் சமயத்தில், தனது அம்மா சாவதற்கே காரணமாக இருந்த, அவள் பெரிய அண்ணனையும் நினைத்துக் கொண்டாள்.

ரயில் போவது தெரியாமல் போய்க் கொண்டிருந்தது. வாய்க்கு வேலையளிக்க வேர்க்கடலைகளோ, மசால் வடைகளோ வரவில்லை. தமிழ்ச்செல்வியை, பெருமை பிடிபடாமல் பார்த்துக் கொண்டிருந்த நவாப்ஜான், பேச்சுக் கச்சேரியைத் துவக்கவேண்டும் என்பதற்காகவே பேசுகிறவன் போல் பேசினான்.

"என்ன சிஸ்டர். செய்தி படிக்கும்போது ஒனக்கு பயமா இருக்குமா..? ஒன்னத்தாம்மா தமிழ்ச்செல்வி..."

"எதுக்கு கூப்பிட்டே?”

"அதுகூட கேட்கலியா. ரேடியோல. நியூஸ் படிக்கிறியே. அப்படிப் படிக்கும்போது ஒனக்கு பயமாய் இருக்காதா. ஏதோ ஒன்று கிடக்க ஒன்று உளறிடுவோமேன்னு பயமாய் இருக்காதா..."

"சும்மா கிடடா. சுத்த முட்டாள். சிஸ்டர் நியூஸ் படிக்கும்போது, 'ஏதோ நம்ம பொழப்புக்கு ஒரு நூறு ரூபாய் கிடைக்குதே'ன்னு மட்டும்தான் நெனச்சிருக்கும். ஏன்னா வாழ்க்கையில் அடிபட்டு அடிபட்டு அவஸ்தை பட்டவங்களுக்கு, தான் செய்யுற எந்தக் காரியத்திலும் ஒரு கடமை தெரியாது. கடனே என்கிற உணர்வுதான் தோணும். இல்லியாம்மா..?"

தமிழ்ச்செல்வி, ஒப்புக்கு தலையாட்டினாள். அதுவும் அவர்களைப் பாராமலே தலையாட்டினாள். தலை என்ற ஒன்று