பக்கம்:நிழல் முகங்கள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 க. சமுத்திரம்

தனக்கு இருப்பது தெரியாமலே அதை அங்குமிங்குமாய் ஆட்டினாள். நவாப் ஜானுக்கும், பலராமனுக்கும் என்னவோ போலிருந்தது. இருவரும் போட்டி போட்டபடியே அவளிடம் பேசப் போனார்கள். இவர்களை முத்தியபடி, மெக்கானிக் நாராயணன் கேட்டார்.

"ஏம்மா ஒரு மாதிரி இருக்கே..?”

"ஒண்னுமில்லியே."

"சொல்லு சிஸ்டர். யாரும் ஒன்கிட்டே தப்பாய் நடந்துக் கிட்டாங்களா..? இன்னும் கொஞ்சம் கேட்டால் அழுதுடுவே போலிருக்கே. ஏம்மா. அப்படி இருக்கே?"

"நல்லாத்தான் இருக்கேன். நவாப்ஜாண்ணா."

"நல்லாத்தான் இருக்கணும். ஆனால் இருக்கலியே. சும்மாச் சொல்லும்மா."

"நான் சொல்றேன்."

எல்லோரும் அந்தக் குரலுக்குரிய கம்லாகரனையே ஒரு சேரப் பார்த்தார்கள். அவன் நவாப்ஜானையும், பலராமனையும் மாறி மாறிப் பார்த்தபடியே விளக்கினான்.

"நான்தான், பாவம் அவர்கள் மனோநிலையை பாதிக்க வைத்தேன். இவனுக்கு செய்ப்பூரில் செயற்கைக் கை பொருத்தணும். மொழி தெரியாத பிரதேசம். முகமறியாத மக்கள். அதனால் தமிழ்ச்செல்வியை என்னோடு உதவிக்கு வர முடியுமா என்று கேட்டேன். கேட்டது தப்புத்தான். ஆனால், அதில் எந்த உள் நோக்கமும் கிடையாது. எங்கள் நாட்டில் ஒரு ஆணும், பெண்ணும் எந்தவித உறவுக்கேடும் இல்லாமல் உதவுவது பழக்கம். இதனால் அவரைத் தாயாகக் கேட்டேன். தவறான எண்ணத்தில் அல்ல. தப்பாக கேட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் தமிழ்ச்செல்வி"

தமிழ்ச்செல்வி, பதறிப்போனாள். ரயில் பயலின் தலையை வருடிய கையைத் துக்கியபடியே சமாதானம் சொன்னாள்.

"அய்யய்யோ. நான் உங்களைத் தப்பாய் நினைக்கவே இல்லை. நீங்க சாக்லெட்டையும் சயனைடையும் ஒரே மாதிரி பாவிக்கிற தமிழர்னு எனக்குத் தெரியும். நீங்க குற்றவுணர்வோடு பிரியக்கூடாது என்கிறதுக்காகச் சொல்றேன். நீங்க கேட்டதிலும் தப்பில்லை. என் பதிலும் தப்பில்லை. நீங்க உங்க நிலைய விளக்கீட்டிங்க. நான் என் நிலையை விளக்கல. அவ்வுளவுதான் வித்தியாசம்."