பக்கம்:நிழல் முகங்கள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 20.3

தமிழ்ச்செல்வி பேசிய வேகத்திலேயே மீண்டும் ஜன்னல் வழியாக கண்களை ஊடுறுவ விட்டாள். பலராமன், கமலாகரன்மீது எரிந்து விழப்போனான். ஆனால், அவள் முகத்தைப் பார்த்ததும், அந்தச் சிறுவனின் மொக்கைக் கையைப் பார்த்ததும், அவன் கோபம் தாபமாகியது. நவாப்ஜான்தான் சமாதானம் சொன்னான்.

"சிஸ்டரால வரமுடியாது லாரே. நீ அப்படிக் கேட்டிருக்கப் படாது. இப்பதான் அது ரேடியோவுல டெம்பரரியாய் வேலைல சேர்ந்திருக்கு. அதைவிட்டுட்டு வரமுடியுமா..?”

தமிழ்ச்செல்வி, அவசர அவசரமாக முகத்தைத் திருப்பினாள். அந்த முகம் முழுமையாய் திரும்பும் முன்பே, வார்த்தைகள் முன்னேறிக் குதித்தன.

"வேலை ஒன்றும் போயிடாது. நவாப்புண்ணா. இனிமேல் மாதக் கடைசியிலதான் படிக்கனும், அதுக்கு இன்னும் இருபது நாள் இருக்குது. செய்ப்பூருக்குப் போயிட்டு வந்துடலாம்."

தமிழ்ச்செல்வி, இதைச் சொல்லிவிட்டு, ஏன் சொன்னோம் என்பதுபோல தன்னையே நொந்து கொண்டாள். நவாப்ஜானும், பலராமனும், தங்களுக்குள் பார்த்துவிட்டு, நாராயணனைப் பார்த்தார்கள். இந்த மூவரும், பின்னர், கமலாகரனையும், தமிழ்ச்செல்வியையும் மாறி மாறிப் பார்த்தார்கள். தங்களுக்குத் தெரி யா ம ல் அவர் களு க்கு ள் ஏதோ ஒன்று ஆழ மாக நடந்திருப்பதைப் புரிந்து கொண்டார்கள். நவாப்ஜான், எடுத்த எடுப்பிலேயே கேட்டான்.

"தமிழ்ச்செல்வி, உன் அண்ணன் கேட்கேன். ஒனக்கு செய்ப்பூர் போறதுல விருப்பம்தானே..? சும்மா சொல்லும்மா."

"எனக்கு ஒண்ணுமே புரியலண்ணா."

"ஆனால், எங்களுக்குப் புரியுதும்மா. நீ வயதுக்கு வந்த பெண். அறிவாளி. ஒன் இஷ்டத்துக்கு விரோதமாய் யாரும் ஒன்னை ஒன்றும் செய்ய முடியாதுன்னு எங்களுக்குத் தெரியும். ஒனக்கும் ஒரு வாழ்க்கை தேவை. ரயிலோட போகிற ரயில்பெட்டிகூட ஒரு கட்டத்துல கூட வராது. இங்கே இருக்கிற நாங்ககூட ஏதாவது ஒரு காலக் கட்டத்துல வேற ரயிலுக்கோ. ஊருக்கோ போகலாம். நம்மோட அண்ணன் தங்கை பாசம் நிசம். ஆனால், இந்த ரயில் வாழ்க்கை பொய். அதனால் உனக்குன்னு ஒரு வாழ்க்கை வரும்போது அதை ஏத்துக்கிறதுல தப்பில்லே."

"டேய் மடையா. மக்குப் பையா. சிஸ்டரை விரட்டியடிக்கவா பார்க்கே..?”