பக்கம்:நிழல் முகங்கள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 சு. சமுத்திரம்

"நீ எப்படியோ பிள்ளை குட்டி பெத்துட்டியே தவிர. ஒனக்கு இன்னும் அதுக்காக உள்ள குடும்ப வாழ்க்கையோட தாத்பரியம் புரியலடா, பலராமா. நான் நம்ம தங்கச்சியை விரட்டியடிக்கலடா. அதை வீட்ல வச்சுப் பார்க்க ஆசைப்படுறேன். புரிஞ்சா புரிஞ்சுக் கோ... புரியாட்டி ஒரு லிட்டர் போட்டுக் கோ... தமிழ்ச்செல்வி ஒன்னத்தாம்மா. இந்த தம்பியோட போயிட்டு வா. பாவம். அவரும் பரிதவிச்சு நிக்காரு. இந்த இருபது நாளில நீங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கலாம். ஒனக்கு புரியக்கூடாது. புரிஞ்சுதுன்னா. இருக்கவே இருக்காங்க. செக்கு உலக்கை மாதிரி உன் அண்ணனுங்க. அதுதான் நாங்கோ."

தமிழ்ச்செல்வி, நவாப்ஜானைப் பார்த்துவிட்டு, கமலாகரனை ஒரக் கண்ணால் உள்வாங்கிப் பார்த்தாள். பிறகு, அவளைத் தாபத்தோடு பார்த்த அந்த ரயில் பயலை, இடுப்போடு சேர்த்து இணைத்தபடியே விக்கி விக்கி அழப் போனாள். உடனடியாக தன்னைக் கட்டுப்படுத்தியபடியே அழாக் குறையாய் பேசினாள்.

“போமாட்டேண்ணா. போமாட்டேன். உங்களையும் இவனையும் விட்டுட்டு எங்கேயும் போமாட்டேன். ஒருநாள்கூட போமாட்டேன்."

ரயில் பயல், தன்னை இடுப்போடு இடுப்பாய் இணைந்த தமிழ்ச்செல்வியின் விலாவிலே முகம் புதைத்தான். அவளின் அடுத்த பக்க இடுப்பையும், இரு கைகளால் இணைத்துப் பிடித்தான். பிறகு, என்ன நினைத்தானோ. ஏது நினைத்தானோ. கீழே விழப் போகும் வகையில் எழுந்தான். தமிழ்ச்செல்விக்கும் கமலாகரனுக்கும் இடையே நின்றுகொண்டு, இருவரையும், மாறிமாறியும், கண்கள் மாரியாகவும் பார்த்தான்.

622ی

அந்த ரயில், பல்வேறு மொழிகள் ஒன்றுபட்டு, புதியதோர் மொழியோசைகள் உற்பத்தியாகும் நாக்பூர் ரயில் நிலையத்தில், வழக்கம்போல் சக்கரக் கால்களை தண்டவாளத்தில் பதித்தபடி நின்றது.

அங்குமிங்குமாய் வியாபித்த கூக்குரல்கள் அடம்பிடித்து ஒரு தரப்பட்ட ஒசையாயின. மனித நடமாட்ட நெருக்கத்தில், கறுப்பு,