பக்கம்:நிழல் முகங்கள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 205

சிவப்பு, வெளுப்பு, புதுநிற முகங்களும், மொட்டை வழுக்கல், ஜடா முடித் தலைகளுடன் ஆறுதலை மனிதன்போல், ஏழுதலை மனிதன் போல் நடமாட்டம்; ஒரு உடம்பிற்குமேல், வேறு பல்வேறு தலைகளும், ஒரு தலையின்கீழ் பல்வேறு உடம்புகளும் இருப்பது போன்ற தோற்ற மாயை.

இப்போதும் அந்த எஸ். 11 பெட்டியில் பலராமன் இருந்தான். அதே மெக்கானிக் சோமையா. ஆனால், நவாப்ஜானுக்குப் பதிலாக அந்தோணி. இந்த இடங்களில் ரெண்டு கிழடு கட்டைகள். எவருக்கும் இடம் கொடுக்க மாட்டோம் என்பதுபோல், கால்களை இருக்கையில் விரித்துப் போட்டிருந்த மார்வாடிக் கூட்டம். இது போதாதென்று, சில ஒசிப் பேர்வழிகள், மார்வாடிக் கூட்டத்தை அதட்டி அதட்டி எழுப்பி விட்டார்கள். அதில் பிடித்த இடத்தில் டில்லி வரைக்கும் டிக்கெட் வாங்கியிருப்பதுபோல் வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

ரயில்பயல், வழக்கம்போல், இந்த நாக்பூரில் இறங்கி, சென்னை நோக்கி நிற்கும் அந்த ஜி.டி.யில் ஏறுபவன். இப்போதோ கைகளிரண்டையும் கட்டியபடி எந்தவித சுரணையும் இல்லாமல் உட்கார்ந்திருந்தான். படபடத்தான் ஒரு சந்தேகத்தைத் கேட்டான்.

"இந்த மார்வாடிப் பசங்களே இப்படித்தான். ஒவ்வொரு காலையும் ஒரு ஆள் மாதிரி வளைச்சுப் போட்டிருக்காங்க பாரு. யோவ் காலை ரெண்டையும் இடுக்கி வையா. நீயுல்லாம் ஒரு காலுக்கு ஒரு டிக்கட்டுன்னு வாங்கணும். ஆமா. நம்ம ரயில்பயல் வளரவே மாட்டானா..? நானும் நாலு வருஷமாய் பார்க்கேன். அப்படியே இருக்கான். ரயில்வே டாக்டரண்ட காட்டணும்பா."

"அவ்வளவுதான். இருக்கிற உடம்பும் பூடும்." எல்லோரும் சிரித்தார்கள். ஆனால், ரயில்பயல் மட்டும் சிரிக்க வில்லை. அங்கே இல்லாததுபோல் இருந்தான். அதைப் புரிந்து கொண்ட அந்தோணி, பயலுக்கு ஆறுதல் சொன்னான்.

"இன்னும் ஏண்டா தமிழ்ச்செல்வியையே நெனச்சுட்டு இருக்கே...? அதுக்கும் ஒரு வாழ்க்கை வேண்டாமா..? அதோட நீதானே அவங்களை சேர்த்து வைத்தே...?”

"என்ன விஷயண்டா..?" "ஒன்கிட்டே சொன்னேனே, அந்தோணி. தமிழ்ச்செல்வி. அவள் செய்ப்பூருக்கு போகமாட்டேன்னுதான் சொன்னாள். இந்தப் பயல்தான் அவங்க ரெண்டு பேரு கையையும் பிடித்து சேர்த்து வைத்தான். அந்தப் பொண்ணும் இவனைப் பிரிய மனமில்லாமலே