பக்கம்:நிழல் முகங்கள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 சு. சமுத்திரம்

பிரித்து போனாள். இப்போ தமிழ்ச்செல்வியும், கமலாகரனும் கல்யாணம் செய்தாச்சு. ரிஜிஸ்டர் கல்யாணம். நானும் நவாப்பும் சாட்சிங்க."

"அவங்க கல்யாணம் செய்தால் இவனுக்கென்னவாம்.”

"பயலுக்கு சந்தோஷந்தான். தமிழ்ச்செல்வியும், முந்தாநாள் எங்களை வந்து பார்த்துட்டு ஒரு சேதியைச் சொன்னாள். அவளும், அவள் புருஷனும் மொரிஷியஸ் போறாங்களாம். அங்கே இருப் பவர்கள் நம் தமிழர்கள்தான். அவங்க பேர்கூட முருகன், ஆறுமுகம், பரமசிவமுன்னு இருக்குதாம். ஆனால், தமிழ்தான் துப்புறாவாய் தெரியாதாம். அங்கே இருக்கிற தமிழ் பேச முடியாமல் போன நம் தமிழ் சோதரர்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஆட்களை அனுப்பி தமிழ் கற்றுக் கொடுக்கணுமுன்னு. தமிழ்நாடு வந்த மொரிஷியஸ் நாட்டு தமிழ் அமைச்சர் பரத்ராம் பேசியிருக்கார். அவரை, தற்செயலாய் வானொலி நிலையத்தில் தமிழ்ச்செல்வியும், கமலாகரனும் சந்திச்சாங்களர்ம். அவர், இவங்க ரெண்டு பேரையும் மொரிஷியஸ் நாட்டுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க கூப்பிட்டிருக்கார். அடுத்த வாரம் ரெண்டு பேரும் தமிழறியாத தமிழர் பூமிக்குப் போறாங்களாம். இதைக் கேள்விப்பட்டதில் இருந்து இந்தப் பயல் சரியா சாப்பிடமாட்டக்கான். பேச மாட்டக்கான். பாவம். இவன், அவளை அம்மாவாகவும், அவள், இவனை மகனாகவும் நினைத்ததுண்டு."

"கிட்டாதாயின் வெட்டன மற."

'பிரச்சினையே இது லதா ன் அ ந் தோணி ... ந ம க்கு வேண்டியவங்களை. பக்கத்து ஊர்லயே வருஷக் கணக்காய் பார்க்காமல் இருப்போம். ஆனாலும், அவங்களை எப்போ வேணுமுன்னாலும் பார்க்கலாம், என்கிற உணர்வு. அவங்களைப் பார்க்காமல் இருப்பது பெரிசாத் தெரியாது. அதே உறவு ஆட்களை பார்க்கவே முடியாதுன்னு ஒரு நிலமை வந்தால், அது பரிதாபம். இவனுக்கு வந்திருக்கதும் இதுதான். தமிழ்ச்செல்வியை இனிமேல் பார்க்கவே முடியாது என்கிற எண்ணத்துல பாவம் துடிக்கான். இவ்வளவுக்கும் அந்தப் பொண்ணு, புருஷனோட சம்மதத்துல இவனைக் கூப்பிட்டாள். அவன், அவருக்குத் தம்பி. எனக்கு தம்பி - நீ. நாலு பேராய் போகலாமுன்னு சொன்னாள். பயலுக்கு நம்மை விட்டும் போகமனமில்லை. வேணுமுன்னால் அவங்களோட போறியாடா..?"

பயல், அவர்களுக்குப் பதில் சொல்வதுபோல் கண்ணிர் விட்டான். அவர்களைப் பிரியமாட்டேன் என்பதுபோல் அந்தோணியின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். இதற்குள் ரயில்